செவ்வாய், 14 மார்ச், 2017

அன்னையார் பிறந்த நாளில் எரிந்தது எரிந்தது மனுதர்மம் எங்கெங்கும் எரிந்தது!

அன்னையார் பிறந்த நாளில் எரிந்தது எரிந்தது மனுதர்மம் எங்கெங்கும் எரிந்தது!

ஆயிரத்திற்கும்மேல் பெண்கள் கைது!



சென்னை, மார்ச். 10  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தபடி, அன்னை மணியம்மையார் 98ஆம் பிறந்த நாளான இன்று (10.3.2017) ஒருகுலத்துக்கொரு நீதி சொல்லும் பெண்ணடிமையை வலியறுத்தும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் தமிழகம், புதுச்சேரியில் 10 இடங்களில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேல் பெண்கள் கைதானார்கள்.

பொறியாளர் இன்பக்கனி தலைமையில், திருவொற்றியூர் செ.உமா முன்னிலையில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப்போராட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி  கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு கழக மாவட்டங்களின் சார்பில் மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.



அன்னை மணியம்மையாரின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2017) சென்னை பெரியார் திடலிலுள்ள அவரது நினைவிடத்தில் கழக மகளிரணியினர் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்வளையம் வைத்து சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம்,

சிலைக்கு மாலை

காலை முதலே பெரியார் திடலை நோக்கி கருப்பு சேலைகளுடன் மகளிரணியினர், கருப்பு உடையில் மகளிர் பாசறைத் தோழர்கள் திரண்டனர். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் உறுதிமொழி கூற, அவரைத் தொடர்ந்து மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞர்கள், மாணவர் அணியினர் உள்ளிட்ட தோழர்கள் உறுதிமொழி ஏற்றார்கள். திராவிடர் தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூலகவாசகர் வட்டம், திராவிடன் நலநிதி சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் திடலில் உள்ள 21 அடி உயர தந்தைபெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின்னர் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாக  சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் மனுதர் மத்தை  எரித்து, மனுதர்மத்துக்கு எதிராக முழக்க மிட்டபடி ஏராளமான பெண்கள் கைதானார்கள்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர்

கலி-பூங்குன்றன்,  கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மாநில மாணவரணி செயலாளர்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பொருளாளர் நா.மாறன், பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, மருத்துவர் மீனாம்பாள், செ.உமா, சி.வெற்றிசெல்வி,  பெரியார் களம் இறைவி, சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, செயலாளர் பொறியாளர் ச.இ.இன்பக்கனி,  பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரிநடராசன், தென் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.கனகா,வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, நாக வல்லி முத்தய்யன், வி.வளர்மதி, பி.அஜந்தா, வெண் ணிலா கதிரவன், புரசை அன்புச்செல்வன் மு.பவானி, வி.சகானாப்ரியா, ஜெ.சொப்பனசுந்தரி, ரா.சங்கரி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, வி.நிலா, ரா.பரணீதரன், கோ.குமாரி, த.லலிதா, குஞ்சிதம் நடராசன், தங்க.தனலட்சுமி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மரகதமணி, கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.ராணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கு.செல்வி, சு.துர்கா, சபலட்சமி, இளையராணி, மு.பவதாரணி, சு.ம.அஸ்வினி, நதியா, கர்லினா மேரி, வரலட்சுமி ஆவடி மோகனப்ரியா, மதுரவாயல் நிர்மலா பாலமுரளி மற்றும் மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் சென்னை மண்டலத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து  மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கிப் பணி யாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, எழுத்தாளர் ஓவியா, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் மங்கள முருகேசன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், தி.வே.சு.திருவள்ளுவன், வட சென்னை மாவட்டத்  தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் கோ.நாத்திகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், செங்குட்டுவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், இரா.பிரபாகரன்,  அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வம், சைதை தென்றல், திருவொற்றியூர் கணேசன், விடுதலைநகர் செயராமன், கரூர் கவுதமன், பெரியார் நூலகவாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், துணை செயலாளர் சேரன், ஆவடி மாவட்ட செயலாளர் சிவக்குமார்,  அமைப்பாளர் உடுமலை வடிவேல், தாம்பரம் மோகன்ராஜ்,  குணசேகரன், இராமேசுவரம் கே.எம்.சிகாமணி,  புழல் ஏழுமலை, இரணியன், அம்பத்தூர் இராமலிங்கம்,   அனகை ஆறுமுகம், கொடுங்கையூர் தங்கமணி, கி.இராமலிங்கம், கலையரசன், பெரியார் மாணாக்கன், இல.குப்புராசு, ஜீவா, கு.சோமசுந்தரம், ஆவடி தமிழ்மணி, க.தமிழினியன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், புகைப்படக்கலைஞர் சிவக்குமார், செஞ்சி ந.கதிரவன்,  ஆவடி இளைஞரணி கலைமணி, முத்துக்கிருஷ்ணன், பெரியார் திடல் சுரேஷ், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் உள்பட ஏராளமான தோழர்கள் அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் பெருந்திரளாகத் திரண்டனர்.

மனுதர்மத்தை எரித்த மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் எழும்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, புதுப்பேட்டை வீரபத்திரா சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர்.

 

சென்னையில் கைதானோர்

பெரியார் பிஞ்சுகள்: அனிச்சம், ம.செம்மொழி, த.எழில், த.யாழ்தமிழ், நிலா, பரணி, சமத்துவமணி, இளந்தென்றல் மணியம்மை, அன்புமணி, அறிவுமதி, இனியவன், வி.தங்கமணி, வி.யாழொளி, நனிபூம்கை, க.ஆற்றலரசி, அஸ்வினி, பவதாரணி, தமிழ்செல்வன்

திருமணம் ஆன மகளிர்

கா.சுபலட்சுமி, மு.கனிமொழி, மா.வீ.அருள்மொழி, ஜோஸ்வின் சகாயமேரி, சரோஜா, கீதா இராமதுரை, விஜயா, மு.இராணி, கு.செல்வி, சு.துர்கா, மா.இளையராணி, மு.நாகவள்ளி, சி.சாந்தி, பெ.கோமதி, க.வனிதா, கு.சங்கரி, சு.சாமுண்டீஸ்வரி, கர்லின்மேரி, செ.உமா, க.சுமதி, இறைவி, க.பண்பொளி, பூவை செல்வி, கற்பகம், சி.ஜெயந்தி, வீரமர்த்தினி, க.வெண்ணிலா, கலைச்செல்வி, எ.கர்லீனா, வரலட்சுமி, தமிழரசி, ச.நதியா, மு.நிர்மலா, கனிமொழி, இளவரசி, யுவராணி, விஜயலட்சுமி, நா.சாந்தகுமாரி, சு.ஆனந்தி, நூர்ஜகான், டி.லலிதா, செ.கனகா, பூங்குழலி

திருமணம் ஆகாதவர்கள்

த.மரகதமணி, ப.எழிலரசி, பூ.வனிதா, மு.பவானி, பா.மணியம்மை, மோகனப்பிரியா, இ.ப.சீர்த்தி

60 வயதுக்கு மேல்

சி.வெற்றிச்செல்வி, க.பார்வதி, ந.சவுந்தரி நடராசன், பா.பானுமதி, ஜெ.இன்பவள்ளி, ச.இன்பக்கனி, ஞா.மலர்விழி, ர.ராணி

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்....

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (10.3.2017) காலை தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர்  செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

மனுநீதி ஒழிந்த நாளே தமிழர்களுக்குத் திருநாள் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவற நன்குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக்கொரு நீதி

என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் சொன்னார்கள்.

மனுநீதி, ஆரிய கலாச்சாரத்தின் வருணா சிரம தருமத்தின் பாதுகாப்பு அரணாகும். அந்த மனுநீதியை இந்திய அரசியல் சட்ட மும், இந்து லா என்று சொல்லக்கூடிய சட்டத்தின் அடிப்படையில் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல, ஜாதி ஒழியவேண்டுமானால், ஜாதியையே ஒழிக்கிறோம் என்று அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும்; வெறும் தீண்டாமையை ஒழிக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது; தீண்டாமை ஒழியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்டப்படி தீண்டாமை ஒழிந்திருக்கிறதே தவிர, இன் னும் இரட்டைக் குவளைகளும், இன்னும் சுடுகாடுகளுக்குக்கூட பொது வீதியில் பிணத்தை எடுத்துச் செல்லக் கூடிய உரிமையைக்கூட பெற முடியாத சூழல் இருக்கிறது.

அதைவிட, எங்கு பார்த்தாலும் பெண் களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், சட்டத்தின் முன் அவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி ஆணவக் கொலைகள் எங்கு பார்த்தாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அளவில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காரணம், முழுக்க முழுக்க இது பாரதீய ஜனதா ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்ற பெயராலே நடைபெறக்கூடிய மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு ஆட்சியாக இருக்கின்ற காரணத்தினால்தான், மூலத்தையே நாங்கள் எரிக்க விரும்புகிறோம் என்று எங்களுடைய வெறுப்பை காட்ட - புதியதோர் மனித தர்மம் மலரவேண்டும் - மனுதர்மம் அழியவேண்டும் என்பதற்காக மகளிரே புறப்பட்டு களம் காணுகிறார்கள். சற்று நேரத்தில் எரிப்பார்கள்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

-விடுதலை,10.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக