செவ்வாய், 13 செப்டம்பர், 2016

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்-11.09.16








           11.09.16ம் நாள் ஞாயிற்றுக் கிழமை
 முற் பகல் 11.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லத்தில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும் ,  மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  துணைத் தலைவர்கள் சி.செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன்  ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

          மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார். தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

          மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் அவர்கள்  கருத்துரை வழங்கினார். முன்னதாக மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன், தரமணி கோ.மஞ்சநாதன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், ஈ.குமார், க.தமிழ்ச்செல்வன்,மற்றும் கு.பா.தமிழினி ஆகியோர் கருத்துகளை கூறினர். பின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.மாவட்டம் முழுக்க  தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழாவை ஒலி பெருக்கி வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடுதல், 2. தந்தை பெரியாரின் படத்தை வண்டியில் அலங்கரித்துவைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லல், 3.கழக கொடியேற்றுதல், 4. மோட்டர் சைக்கிள் ஊர்வலத்தை இரண்டு கட்டமாக, 17.09.16 மற்றும் 25.09.16 ஆகிய நாள்களில்  நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரல்

(1) 17.09.16 சனிக்கிழமை 
      காலை 7.00மணிக்கு தரமணி தந்தை பெரியார் நகர், தந்தை பெரியார் 
      சிலையிலிருந்து மோட்டர் சைக்கிள் ஊர்வலம் புறப்படுகிறது.
      காலை 8.00மணிக்கு மந்தைவெளி (படிப்பகம்), காலை 9.00மணிக்கு தியாகராயர் 
       நகர் தந்தை பெரியார் சிலை(மாலை அணிவித்தல்),
      காலை 9.30மணிக்கு அண்ணா மேம்பாலம்  தந்தை பெரியார் சிலை(மாலை 
      அணிவித்தல்),மு,பகல் 10.00மணிக்கு சென்னை பெரியார்              மையம் 
      (நிகழ்ச்சிகளில் பங்கேற்பு), மு,பகல்11.00மணிக்கு சேத்துப்பட்டு தந்தை பெரியார் சிலை
       (மாலை                                                                    அணிவித்தல்), 
      மு,பகல்11.30மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி சென்றடைந்து 
       முதற்கட்ட மோட்டர் சைக்கிள் ஊர்வலம்          நிறைவு.

(2) 25.09.16 ஞாயிற்றுக் கிழமை
       காலை 10.00மணிக்கு நுங்கம்பாக்கம், காவல் நிலையம் அருகிலிருந்து இரண்டாம் 
       கட்ட மோட்டர் சைக்கிள் ஊர்வலம் புறப்படுகிறது.
       மு,பகல்11.00மணிக்கு சூளைமேடு {காவல் நிலையம் அருகில்), 
        மு,பகல்11.30மணிக்கு வடபழனி, நண் பகல் 12.00மணிக்கு     
       அரும்பாக்கம்(மெகா மார்ட் எதிரில்), பிற் பகல் 1.00 மணிக்கு சின்மயா நகர்  துணைத் 
        தலைவர்கள் சி.செங்குட்டுவன், அவர்கள் இல்லம் 
        வாயிலில் இரண்டாம் கட்ட மோட்டர் சைக்கிள் ஊர்வலம் நிறைவு.
           கலந்துரையாடலின் முடிவில் மு.சண்முகப்பிரியன் நன்றி கூறினார்.


-விடுதலை,14.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக