திங்கள், 18 ஏப்ரல், 2016

மறியல் போர்-சென்னை மண்டல கலந்துரை-16.4.16


சிறுகனூர் மாநாட்டின் வெற்றியை
மறியல் போராட்டத்தில் காட்டுவோம்!
உற்சாகமாக நடைபெற்ற சென்னை மண்டலக் கூட்டத்தில் தமிழர் தலைவர்
சென்னை, ஏப்.17_ திருச்சி_பெரியார் உலகம் சிறுகனூர் மாநாட்டின் வெற்றியை நாளை தமிழ்நாடெங்கும் கழகம் நடத்தவிருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை மறியலில் காட்டுவோம்_ காட்ட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் கலந் துரை யாடல் கூட்டம் நேற்று (16.4.2016) மாலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய கழக மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளி யுறவு செயலாளர் வீ.குமரேசன், தலைமைசெயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம், தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு,
சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர் உமா, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செய லாளர் செ.ர.பார்த்தசாரதி, குமமிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயக்குமார், மாவட்ட செயலாளர் புழல் த.ஆனந்தன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையு ரையில் குறிப்பிடும்போது,
கழகத் தோழர்கள் கட்டுப்பாடு காத்திட வேண்டும்.  திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற நம்முடைய மாநாடு மிகப்பெரிய வெற்றிகரமான மாநாடு என்று எல்லோ ருக்கும் தெரியும். மாநாட்டின் வெற்றி அரசு மற்றும் மற்றவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்தப் போராட்டத்தின்மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகவேண்டும் என்று கோரி நாம் மறியல் போராட் டத்தை நடத்து கிறோம். கேரளாவில் சபரிமலைக் கோயிலில் மகாராட் டிராவில் கோயில்களில் பெண்கள் செல்ல வேண்டும் என்று பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது.
பாலின வேறுபாடுகள் கூடாது என்பது போன்றே ஜாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. காற்றுக்கு என்ன வேலி என்பதுபோல், கொள்கைக்கு எவரும் வேலி போட முடியாது. அதிகாரிகள், மற்றவர்கள் கொள்கையாக நம்மிடையே விரிந்திருக்கிறார்கள்.
கட்டுப்பாடு காத்திடுவீர்!
திராவிடர் கழகத்தினர் என்றாலே எப்போதும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருப்பவர்கள். நம்முடைய போராட்டம் என்றாலே காவல்துறையினருக்கு நிம்மதி இருக்கும்.
சென்னையில் இப்போது வெப்ப அலை ஏற்பட்டுள் ளது. தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள்  அனை வருமே தகுந்த முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும். தலையில் குல்லாய், தண்ணீர், மோர் பாக்கெட், எலுமிச்சைச் சாறு என்று வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ அணியும் முன்னேற்பாட்டுடன் இருக்கும்.
நாம் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு இதன்மூலம் ஏற்பட்டுள்ளது. பயிற்சி முகாமாக இருக்கும். இறையன் குடும்பத்தினரைப்போல்  கைது செய்யப்பட்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள் பவர்களும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நமக்கு புத்தகச்சந்தை, புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா, தேர்தல் என பல பணிகள் உள்ளன. யாரோ வரட்டும் என்று இருக்க முடியாது. கொள்கைக்கு ஒத்து வருபவர்கள் வரவேண்டும். ஆகவே, அந்த பணியும் உள்ளது.
பார்ப்பனக் கொடுமையைவிட வெப்பம் பெரிய கொடுமையாக இருக்காது. வெப்பத்தின் கொடுமையையும் சந்திப்போம். தந்தை பெரியார் அறிவித்த இறுதிப் போராட்டம்.  போராட்டம்குறித்து விடுதலையில் கவிஞர் அழகாக கவிதையாகவே எழுதியுள்ளார். ஆக இந்த வாய்ப்பு வாழ்நாளில் கிடைக்க முடியாதது.
பலரும் பங்கேற்பு
தமிழ்நாட்டில் 70 இடங்களில் நடைபெறுகிறது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், ஆதித்தமிழர் பேரவை அதியமான், பழங் குடியின மக்கள் இயக்கத்தவர்கள் என பலரும் நம்மு டைய போராட்டத்தில் பங்கேற்கின்றார்கள். கிருபானந்த வாரியாரின் பணிகளை செய்துவரும் சத்திய வேல்முரு கனார் வரவேற்று அறிக்கை கொடுத்துள்ளார். பலரும் நம்முடைய போராட்டத்தை ஆதரித்துள்ளார்கள்.
எந்தவிதமான சங்கடங்களையும் எற்றுக்கொண்டு முழு வெற்றி பெறுவோம். வெற்றியின் விளிம்பில் நிற்கிறோம். தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியே தீருவோம். எல்லோரும் உரிய நேரத்தில் வந்து கட்டுப்பாடு காத்திட வேண்டும். மாநாட்டின் வெற்றிக்கனி, போராட்டத்தின்மூலம் பெறுவோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையின்போது குறிப்பிட்டார்.
சென்னை மண்டலத்தின் கழக மாவட்டங்களான தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும் மிடிப்பூண்டி மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள், மகளிரணித் தோழியர்கள், இளைஞரணி, மாணவரணி, வழக்குரைஞரணித் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்பதிலும், மற்றவர் களைப் பங்கேற்க செய்வதிலும்  உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
கழகத்துணைத் தலைவர் சுற்றுப்பயணத்தின்போது சென்னை மண்டலத்தில் கழகப் பொறுப்பாளர்கள் சிறைசெல்பவர்களின் பட்டியலை கொடுத்தார்கள்.  இப்போது அப்பட்டியல்களில் குறிப்பிடப்பட்டதைவிட எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறை செல்பவர்களின் பட்டியலில் 12 விழுக்காட்டளவில் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் விவரம், குடும்பத்தார் விவரம் என அதற்கான படிவத்தைப் பெற்று பொறுப்பாளர்களிடம் நிரப்பிக் கொடுத்தார்கள்.
போராட்டத்தில் பங்கேற்பவர்கள் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பாக 18.4.2016 காலை 10 மணிக்கும் முன்பாகவே குறித்த நேரத்தில் திரள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில் சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை நன்றி கூறினார்.
-விடுதலை,17.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக