புதன், 3 பிப்ரவரி, 2016

இளைஞரணி-மாணவரணி ஆர்ப்பாட்டம்-27.1.16






































தெலுங்கானா மாநிலம் - அய்தராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வேமுலா தற்கொலைக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (27.1.2016)


“வேண்டாம் தற்கொலை- உரிமைக்கான போராட்டத்தில் உயிர் விட்டால் அதனை வரவேற்கலாம்!’’

சென்னை, ஜன.27_ அய் தராபாத் தாழ்த்தப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா இறப்புக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரி யார் தலைமையில்  நடை பெற்றது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை யில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டனப் போராட்ட விளக்க உரை யாற்றினார்.
செய்தியாளர்களி டையே திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கூறிய தாவது:
இந்த ஆர்ப்பாட்டம் திராவிடர் மாணவர் கழ கத்தின் சார்பாக இங்கே நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம் சில நாள்களுக்கு முன்னாலே தெலங்கானா மாநிலத்தில் அய்தராபாத் தில் இருக்கக்கூடிய மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா என் கின்ற ஒரு மாணவர் தற் கொலை செய்து கொண்ட காரணத்துக்காக, நாடெங் கும், இந்தியா முழுவதும் ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்  மத்திய பல் கலைக்கழகத்திலே ஆய் வுப்பட்டம் மேற்கொள்வது என்பது சாதாரண ஒன் றல்ல. பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அது அய்.அய்.டி.யாக இருந்தா லும் சரி, அய்.அய்.எம்.ஆக இருந்தாலும் சரி, எயிம்ஸ் ஆக இருந்தாலும் சரி, மத்திய பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி அங்கே பெரும்பாலும் உயர் ஜாதி பார்ப்பனர்களுடைய ஆதிக்கம்தான் இருந்து வருகிறது. இப்போதுதான் அண்மைக்காலமாக தப் பித்தவறி தாழ்த்தப்பட்ட வர்களும், பிற்படுத்தப்பட் டவர்களும் நுழைய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலே அவர்கள் தலையெடுக்கக் கூடாது என்ற ஒரு ஜாதிய ஆதிக்க உணர்வு, குறிப்பாக இன்றைக்கு இருக்கின்ற பிஜேபி தலைமையில் உள்ள மத்திய ஆட்சிக்கு இருந்து வருகிறது. அத னுடைய விளைவுதான் இந்த தற்கொலை.
மத்திய அமைச்சர்களே காரணம்!
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இந்த மாணவருடைய தற் கொலை என்ன காரணங் களைச் சொல்கிறார்கள்? மத்திய தொழிலாளர்த் துறை அமைச்சராக இருக் கக்கூடிய பண்டாரு தத் தாத்ரேயா அவர்கள் சொல்கிறார்? ‘‘எனக்கு ஒரு புகார் கடிதம் வந்தது, ஏபிவிபி மாணவர் அமைப் பின் சார்பாக ஒரு புகார் கடிதம் வந்தது. நாங்கள் அம்பேத்கர் மாணவர் அமைப்பு மாணவர்களால் தாக்கப்பட்டிருக்கிறோம், இதனை விசாரிக்க வேண் டும் என்று எனக்கு புகார் கடிதம் வந்தது. அந்த கடிதத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு  அனுப்பி வைத்தேன். அதோடு என் னுடைய பணி முடிந்து விட்டது. நான் இதில் தலையிடவில்லை, அந்த மாணவனுடைய தற் கொலைக்கு நான் காரண மல்ல என்று சமா தானம் சொல்கிறார்.
மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச் சராக இருக்கக்கூடிய ஸ்மிரிதி இரானி என்ன சொல்கிறார் என்று சொன் னால், மத்திய அமைச்சர் ஒருவர் எழுதிய கடிதத்தை நான் மத்திய பல்கலைக் கழகத்துக்கு அனுப்பிவைத் தேன். அதோடு என்னு டைய பணி முடிந்துவிட் டது என்று சமாதானம் சொல்கிறார். உண்மை என்னவென்றால், இவர் கள் சொல்லுகின்ற அந்த மத்திய அமைச்சரின் கடி தத்தில்  என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை திட்டமிட்டு மறைக்கிறார் கள். அந்த கடிதத்திலே வெளிப்படையாக  அம் பேத்கர் மாணவர் அமைப்பு என்பது ஜாதி வெறி பிடித்த அமைப்பு, அதே போல தேச விரோத அமைப்பு என்று வெளிப் படையாகச் சொல்லி, இன் னும் சொல்லப்போனால், மத்திய அமைச்சரே குற் றப்பத்திரிகை எழுதிவிட் டார். அவரே எஃப்அய்ஆர் போட்டுவிட்டார். அந்த கடிதத்தை மத்திய வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தத் துறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளி யில் நான்கு நினைவூட்டுக் கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கின் றன.
நமக்கெல்லாம் தெரியும் அலுவலகங்களிலே ஒரு கடிதம் என்று சொன்னால், அது எவ்வளவு நாள்கள் தூங்கும் என்று எங்களுக் கெல்லாம் தெரியும். ஆனால், நான்கு நினை வூட்டுக்கடிதங்கள் போட வேண்டிய அளவுக்கு என்ன அவசியம் வந்தது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அப்படி அந்த மாணவர்கள் என்னதான் செய்துவிட்டார்கள்? அம்பேத்கர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என்ன செய்தார்கள் என் றால், இரண்டு காரியத்தைச் செய்தார்கள்.
யாகூப் மேமன் தூக்கு!
மும்பை கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அந்த கலவரத்துக்கு கார ணம் யாகூப் மேமன் என்று அவர்களைத் தூக்கி லிட்டார்கள். இவ்வளவுக் கும் யாகூப் மேமன் அவர் கள் நேரடியாக அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர் அல்லர். அப்ரூவராக, அர சாங்கத்துக்கு ஆதரவாக வந்த ஒருவரை இப்படி அநியாயமாகத் தூக்கி லிட்டிருக்கிறீர்களே என்று அந்த மத்திய பல்கலைகழக மாணவர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள அமைப்புகள்கூட அதைப்பற்றி கருத்துகள் தெரிவித்திருக்கின்றன. அதேபோல, அந்த மாண வர்கள் முசாபர்நகர் கல வரத்தைப்பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்டிருக் கிறார்கள்.  அதுவும் மத் திய பிஜேபி ஆட்சிக்கு விரோதமாக இருந்தது. ஆகவே, இந்த அடிப்படை யில் அந்த மாணவர்கள் செயல்பட்ட காரணத் தாலே, அதில் ஏபிவிபி என்கிற பிஜேபியினுடைய மாணவர் அமைப்பு வளர்ச் சிக்கு கேடாக இருக்கின்ற காரணத்தால்தான், திட்டமிட்டு ஏபிவிபியின் வளர்ச்சிக்காகத்தான் இந்த அம்பேத்கர் மாணவர் அமைப்பை அவர்கள் ஒடுக்க நினைத்தார்கள்.  அதற்கு  பலியானவர்தான் இந்த ரோகித் என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.
இதனால், ஏற்பட்டிருக் கின்ற விளைவு இன்றைக்கு இந்தியா முழுவதும், கிளர்ந்து எழுந்துகொண் டிருக்கிறது. அதனுடைய ஒரு கூறாகத்தான் திராவி டர் மாணவர் கழகம் இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியிலே எடுத்துச் செல்கிறது.
இன்றைக்கு இருக்கக் கூடிய மத்திய அரசாங்கம் சமூக நீதிக்கு எதிரான அரசாங்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அர சாங்கம். ஆகவே, ஒடுக்கப் பட்ட மக்களே ஒன்று சேருங்கள். இந்த அநீதியை எதிர்ப்போம் என்று குரல் கொடுப்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்துகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களே தற் கொலை செய்து கொள் ளாதீர்; உரிமைப் போராட் டக் களத்திலே உயிர் விட்டால் அதனை வர வேற்கலாம்.
_இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்டார்.
அய்தராபாத் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை: 
மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணிசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன.27_ அய் தராபாத் தாழ்த்தப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா இறப்புக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் திராவிடர் கழக மாண வரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார் தலைமையில்  நடைபெற்றது. சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆர்ப்பாட்ட முழக்கமிட் டார். மாநில வழக்குரை ஞரணி தம்பி பிரபாகரன், சென்னை மண்டல இளை ஞரணி செயலாளர் செ.தமிழ்சாக்ரட்டீஸ் கண்டன உரையாற்றினர்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னி லையில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் கண்டனப் போராட்ட விளக்க உரை யாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்
திராவிடர் கழக வெளி யுறவுச் செயலாளர் வீ.கும ரேசன், தலைமைச்செயற் குழு உறுப்பினர் க.பார்வதி, அமைப்புச் செயலாளர் வெ. ஞானசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பொதுக் குழு உறுப்பினர் தூத்துக் குடி பெரியாரடியான்
மகளிரணித் தோழியர்கள்
வடசென்னை மாவட்ட மகளிரணி கு.தங்கமணி, குணசீலன், சி.வெற்றிச் செல்வி, தங்க.தனலட்சுமி,  மகளிர் பாசறை உமா செல்வராசு, பொறியாளர் இன்பக்கனி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பெரியார்களம் இறைவி, வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, ஆவடி மகளிர் பாசறை உ.மோகனபிரியா, வளர்மதி, அஜந்தா, மரகத மணி, சந்திரா முனுசாமி, செல்வி, கற்பகம், பவானி, கலைமதி, தமிழ்செல்வி,  சீர்த்தி, சந்தியா
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உத யக்குமார், செயலாளர் புழல் த.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வ.இரவி, பொன்னேரி நகரத் தலைவர் வே.அருள், நாகராஜ், மாவட்ட மாண வரணி அமைப்பாளர் மீஞ்சூர் இராஜ்குமார், சுகன்ராஜ், பழனி பாலு, புழல் ஒன்றிய செயலாளர் சனாதிபதி
ஆவடி மாவட்டம்
ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புராசு, அமைப்பாளர் உடுமலை வடிவேல், கோ.முருகன், திருநின்றவூர் மு.இரகுபதி, சு.அருண், இராமதுரை, பெ.மு.செல்வி, மனோகரன், கலைமணி, கலையரசன், திலீபன், ஆவடி தமிழ்மணி, பெரியார் மாணாக்கன்
தென்சென்னை மாவட்டம்
தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி. பாலு, கோ.வீ. இராகவன், மயிலை டி.ஆர்.சேதுராமன், மயிலை பாலு,  கோ.மஞ்சநாதன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சி.செங் குட்டுவன், இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செய லாளர் மு.சண்முகபிரியன், மகேந்திரன், சி.காமராஜ், மந்தைவெளி மு.முரளி, இரா.பிரபாகரன், அடை யாறு ந.மணித்துரை, செஞ்சி கதிரவன், அய்ஸ் அவுஸ் கோவிந்த், க.விஜய ராஜா, சேத்துப்பட்டு க.எழில்,  அ.அருண், மு.மாணிக்கம்
வடசென்னை மாவட்டம்
வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன்,     அமைப்பாளர் சொ.அன்பு, கருங்குழி கண்ணன், அய் னாவரம் மாடசாமி, சேர லாதன், இளைஞரணித் தலைவர்  புரசை அன்புச் செல்வன், பாலமுருகன்,  திருவொற்றியூர் கணேசன், பா.பாலு, ந.இராசேந்திரன், ஏழுகிணறு கதிரவன், மண்ணடி கருத்தோவியன்,
தாம்பரம் மாவட்டம்
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தாம்பரம் நகரச் செய லாளர் சு.மோகன்ராஜ், மா. குணசேகரன், அப்துல் காதர், கூடுவாஞ்சேரி மதி வாணன், சம்பத்,கரை மாநகர் தே.சுரேஷ்
தொழிலாளரணி பெ.செல்வராசு, கூடுவாஞ்சேரி மா.ராசு, நாகரத்தினம்,  ராமலிங்கம், பழனி பாலு, திருவண்ணாமலை மண்டலச் செயலாளர் கு.பஞ்சாட்சரம், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் கு.மனோ கரன், பெரியார்திடல் இசையின்பன், அமுதரசன், அம் பேத்கர், எஸ். விமல்ராஜ்,சங்கர், சுரேஷ், பழனிக்குமார், ஆனந்த், மகேஷ், சிறீராம், ரேவந்த் உள்பட ஏராள மானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப் பாட்ட முடிவில் தளபதி பாண் டியன் நன்றி கூறினார்.
-விடுதலை,27.01.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக