ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை கழகத் துணைத் தலைவர் தொடங்கி வைத்து உரையாற்றினார். (24-1-2016)
ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சி முகாமில் இரண்டாம் நாள்
ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சி முகாமில் இரண்டாம் நாளான இன்று (25.1.2016) ‘இந்துத்துவா ஒரு அபாயம்’ என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். உடன்: கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், பேராசிரியர் ப. காளிமுத்து, தருமபுரி மாவட்டத் தலைவர் வேட்ராயன், மாவட்ட செயலாளர் சிவாஜி.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பெரியார் பெருந்தொண்டர் எம்.என்.நஞ்சய்யா அரங்கத்தில் இரண்டாவது ஆண்டாக ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி பட்டறையில் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சென்னை, உடுமலைப்பேட்டை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலோர் பயிற்சி முகாமுக்கு புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொல்வதற்கு ஓர் இயக்கம் தேவைப்பட்டது ஏன்?
இந்தக்கொடுமை இந்து மதத்தைத்தவிர உலகில் வேறெங்கும் உண்டா?
ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் தமிழர் தலைவர் உரை!
ஒகேனக்கல். ஜன. 29- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டின் இரண்டாம் நாள் பயிற்சியில் ‘இந்துத்துவா ஓர் அபாயம்’ என்ற தலைப்பில் தமிழர் தலைவர் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.
அதிகாலைமுதல் இரவுவரை!
முகப்பில் ஒருபக்கம் தந்தை பெரியார் சிலை, மற்றொரு பக்கம் பெரியார் பெருந்தொண்டர் எம்.என். நஞ்சய்யாவின் மார்பளவிலான சிலை! இந்த இரண்டு சிலைகளும் வரவேற்பதுபோல அமைந்திருக்க, மேற்கு தொடர்ச்சி மலைகள் நான்கு புறமும் சூழ இயற்கையின் குழந்தைபோல மய்யத்தில் அமைந்திருக்கிறது பெரியாரி யல் பயிற்சி நடைபெறும் பெரியார் மன்றம். காலை 6_30 மணிக்கே சுறுசுறுப்பாக பயிற்சி தொடங்கிவிடுகிறது.
ஆம்! மல்லிகா ராஜரத்னம் அவர்களின் யோகா பயிற்சியும், வேலூர் வீர விளையாட்டுக்கழக தோழர்கள் சிலம்பாட்டப் பயிற்சியும் அதிகாலையிலேயே தொடங்கி விடுகிறது. அரங்க வகுப்புகள் சரியாக 9 மணிமுதல் தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் இடையில் வருகைப்பதிவு எடுக்கப்படுகிறது.
ஒட்டு மொத்த பயிற்சியையும் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் ஒருங்கி ணைத்துச் சிறப்பித்தார். பயிற்சிப்பட்டறையில் வகுப்பு களும், திரையிடல்களும், பேச்சுப்பயிற்சியும், உணவும், உபசரிப்புமாக எல்லாவற்றையும் புதிதாக வந்திருந்த 81 மாணவர்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்துத்துவா ஓர் அபாயம்!
இயக்கப் போராட்டங்கள், நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஓர் அபாயம், தமிழர் தலைவரின் தனிச் சிறப்புகள் என்ற தலைப்புகளில் முறையே முனைவர் துரை சந்திரசேகரன், செயலவைத்தலைவர் சு. அறிவுக் கரசு, தமிழர் தலைவர் கி. வீரமணி, துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் வகுப்புகளை எடுத் தனர்.
அதில் ‘இந்துத்துவா ஓர் அபாயம்’ என்ற தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றும் போதுதான், இந்து மதம் என்றால் என்ன? இந்துத்துவா என்றால் என்ன? இவைகளால் நமக்கு எப்படி ஆபத்து வரப்போகிறது? என்பதைப்பற்றி ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தார். அப்படி குறிப்பிடும் போதுதான், இந்து மதத்தின் மிக முக்கியமான கொடு மையான ‘எதைக்கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்கலாகாது’ என்ற மனு தர்மத்தை சுட்டிக்காட்டி, “எல்லோரும் படிக்க வேண்டும் என்பதைச் சொல்வதற்கு ஓர் இயக்கம் தேவைப்பட்டது” என்பதை உலக நாடுக ளோடு ஒப்பிட்டுப் பேசிவிட்டுத்தான், “இது ஒரு மோச மான உலக அதிசயம்” என்றும் பல்வேறு கருத்துகளுக் கிடையே குறிப்பிட்டார்.
சுயமரியாதைத் திருமணம்!
சுயமரியாதைத் திருமணம்!
முன்னதாக கழக சேலம் மாவட்டத் தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம் அவர்களின் இல்லத்தின் 8 ஆவது தாலி மறுப்புத் திருமணமாக இந்த திருமணம் பயிற்சி வகுப்புகளோடு ஒரு வகுப்பாக நடைபெற்றது.
மணமகனின் பெற்றோர் மாரியப்பன் சிங்காரம், மண மகளின் பெற்றோர் பழனிசாமி தமிழ்ச்செல்வி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தமிழர் தலைவரின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
மணமகனின் பெற்றோர் மாரியப்பன் சிங்காரம், மண மகளின் பெற்றோர் பழனிசாமி தமிழ்ச்செல்வி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தமிழர் தலைவரின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
வகுப்புகளைப் போலவே திருமண நிகழ்ச்சியையும் ஒருங்கிணைப்புச் செய்து கொடுத்த பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன் அவர்கள் தொடக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் ஒரு செயல்முறை வகுப்பாக நடைபெறவுள்ளது என்றே அறிமுகம் செய்தார்.
இத்திருமண நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, மோகனா வீரமணி, சி.வெற்றிசெல்வி, மலர்விழி, பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி. புள்ளையண் ணன், பேராசிரியர் ப.காளிமுத்து, மருத்துவர் கவுதமன், மருத்துவர் புகழேந்தி, தர்மபுரி மாவட்டத் தலைவர் புலவர் வேட்ராயன் மற்றும் பயிற்சியாளர்கள், பார்வை யாளர்களென சிக்கனத் திருமணத்தின் சிகரமாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை நன்றியுடன் நினைவுகூர்ந்தவாறு நடைபெற்றது.
மண்டலத் தலைவர் புலவர் சுப்பிரமணியம் அவர் களது இல்லத்தின் 8 ஆவது தாலி மறுப்புத்திருமணம் இது என்பதும், இந்த 8 திருமணங்களும் தமிழர் தலை வரின் தலைமையிலேயே நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் இத்திருமண நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசும்போது: எட்டுத் திருமணங்க ளையும் தமிழர் தலைவர் நடத்தி வைத்ததை நினைவு கூர்ந்து திருமணம் செய்து கொண்ட இளஞ்செழியன் அகிலாவைச் சுட்டிக்காட்டி, இவர்களது குழந்தைகளது திருமணத்தையும் தமிழர் தலைவர் நடத்தி வைப்பார் என்று குறிப்பிட்டுப் பேசியதை எடுத்துக்காட்டிப் பேசிய தமிழர் தலைவர், என்னுடைய ஆயுள் கூட வேண்டும் என்பதல்ல, வழிவழியாக இந்த கொள்கை வழிப்பயணங்கள் இருக்கின்றன என்பதுதான் அதன் அடிப்படை என்று அவருக்கேயுரித்தான முறையில் குறிப்பிட்டார்.
மாலையில் பேச்சுப்பயிற்சியோடு பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறையின் சார்பில் தந்தை பெரியாரின் முதல் ஒளிப்புத்தகமும், ஆவணப்படமுமான ‘இனிவரும் உலகம்’ மற்றும் ‘திற’ குறும்படமும் திரையிடப்பட்டன. பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் எல்லா வகையிலும் மனநிறைவோடு நிறைவுற்றது.
-விடுதலை,29.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக