வியாழன், 20 ஆகஸ்ட், 2015

’நீதி நடை’ (Justice Walk) -16.8.15

சென்னை தினம் (Madras Day) பல ஆண்டுகளாக ஆகஸ்ட் 22ந் தேதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி ஒரு வாரகாலத்திற்கு முன்பிருந்தே சென்னையின் வரலாறு சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிகழ்வுகளில் ஒன்றாக ’நீதி நடை’ (Justice Walk) இன்று (16.8.15) காலை 6.00க்கு தொடங்கி நடைபெற்றது. நூற்றாண்டு காணும் திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சியின் வரலாற்று அடையாளங்கள் நிறைந்த திருவல்லிக்கேணி பகுதியில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிராமணரல்லாதார் அறிக்கை வெளியிடப்பட்ட ராஜூகிராமணித் தோட்டம் (சென்னை மயிலாப்பூர்,சிட்டி சென்ட்டர்), திராவிட இயக்க முன்னோடி டாக்டர் நடேசன் சாலை, திராவிட இயக்கம் மீது விமர்சனங்கள் வைத்த பாரதியாரின் இல்லம், திராவிட இயக்கத் தலைவர்கள் பிட்டி தியாகராயர்-டி.எம்.நாயர் இருவரும் ஒருகட்டத்தில் முரண்பட்டு நிற்க காரணமாக அமைந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளம், ‘பிராமணாள் ஹோட்டல்’ என்ற பெயரை அகற்றக்கோரி பெரியார் முன்னெடுத்த போராட்டம் நடந்த முரளி கபே (சங்கீதா ஓட்டல்), திராவிட மாணவர் விடுதி அமைந்திருந்த அக்பர் சாகிப் தெரு, திராவிட இயக்க பத்திரிகையாளர் சின்னகுத்தூசி வாழ்ந்த விடுதி, திராவிடச் சான்று என்ற ஆய்வுநூலைத் தந்தவர் பெயரில் அமைந்துள்ள எல்லீஸ் சாலை இவற்றின் வழியாக நடந்து திராவிட இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த தலைவரான அறிஞர் அண்ணாவின் சிலை அருகே நடைப்பயணம் நிறைவுற்றது.
இந்தப் பயணத்தில் வரலாற்று எழுத்தாளர் ஸ்ரீராம், பத்திரிகையாளர்கள் கோம்பை அன்வர், டெக்கான் க்ரானிக்கல் கார்த்தி, சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் கொள்ளுப்பேரன் அப்பாராவ், பி.எஸ்.என்.எல் மேலாளர் முரளி, தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சாரதி, பெரியார் திடல் உடுமலை வடிவேல், தி.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, 
தி.க. தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.தமிழ்ச்செல்வம், சுந்தர், டெல்லிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நூறாண்டு கண்ட இயக்கத்தின் போராட்டங்கள்-சாதனைகள்-தடங்கல்கள் ஆகியவற்றை இரண்டரை மணி நேர நடையில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இத்தகையப் பயணங்கள் தொடரும்.. .. ஆர்வமுள்ளவர்களுக்கு வசதியாக முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
''நீதிக் கட்சி நடை'' என்கிற பெயரில் 16.8.15 காலை 6.00 சென்னை மயிலாப்பூர் ''சிட்டி சென்ட்டர்'' என்ற இடத்திலிருந்து ''திராவிடர் இயக்க'' வரலாற்று இடங்களை காண நடைபயணமாக கோ.வி.இலெனின் தலைமையில் புறப்பட்டோம்.

நீதிக்கட்சி தோன்ற முக்கிய பங்காற்றிய நடேசனார் பெயரிலுள்ள சாலை(திருவல்லிக்கேணி, நடேசனார் சாலை) வழியாக சென்று இரருசப்ப தெரு முனையில் பார்த்தசாரரதி கோயில் தெற்கு வாசலின் எதிரில் கூடி அறிமுகவுரை நிகழ்த்தப்ப்பட்டது.(உரை-கோ.வி.இலெனின்)






திருவல்லிக்கேணி பார்த்தசாரரதி கோயில் பின்புறம் உள்ள பாரதியார் நினைவு இல்லம் வாழிலில் வரலாற்று செய்தி பகிர்வு!






திருவல்லிக்கேணி அடுத்து சேப்பாக்கம் பகுதிக்குள் நுழைந்தோம் நீதிக்கட்சி தோன்ற முக்கிய பங்காற்றிய நடேசனார் அவர்கள் ''திராவிடர் மாணவர் இல்லம்'' என்ற பெயரில் வெளியூர் திராவிடர் இன மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி ஒன்றை இந்த பகுதியில்(அக்பர் சாகிப் தெரு) திறந்தார். அந்த காலத்தில் (1912) பார்ப்பனர்கள் மட்டுமே தங்கிப் படிக்கும் விடுதிகளே சென்னையில் இருந்தன

திருவல்லிக்கேணி அடுத்து சேப்பாக்கம் பகுதிக்குள் நுழைந்தோம் இந்துக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்து பள்ளிக் கூடத்தின் முன்பாக நினைவு கூறப்பட்டது.

திருவட்டீஸ்வரன் பேட்டை என்கிற இடத்தில் உள்ள வல்லப அக்ரஹாரம் தெருவில் ''பேரடைஸ் மேன்சன்'' என்கிற தங்கும் விடுதி முன்பாக கூடினோம். இவ் விடுதியில் முன்பெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமே தங்க முடியும். இந்த விடுதிக்குள் தான் இறக்கும் வரை எழுத்தாளர் சின்ன குத்தூசி வாழ்ந்தார். அவரை அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனர் அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

 திராவிடச் சான்று என்ற ஆய்வுநூலைத் தந்தவர் பெயரில் அமைந்துள்ள எல்லீஸ் சாலை இவற்றின் வழியாக நடந்து திராவிட இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த தலைவரான அறிஞர் அண்ணாவின் சிலை அருகே நடைப்பயணம் நிறைவுற்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக