புதுவண்ணை, ஜூலை 29_ 21.6.2015 ஞாயிறு மாலை 6 மணிக்கு புதுவண்ணை கழகக் கட்டடம் தந்தை பெரியார் மாளிகையில் வடசென்னை மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் ச.குமாரதேவன் தலைமையும், கழகப் பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் வெ.மு.மோகன் முன்னிலையும் வகித்தனர்.
வடசென்னை மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், துணைச் செயலாளர்கள் கி.இராமலிங்கம், கோ.கதிரவன், அமைப்பாளர் சொ.அன்பு, பெரம்பூர் தி.செ.கணேசன், மாவட்டக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் ஓட்டேரி சி.பாசுகர், எண்ணூர் மு.மணிகாளியப்பன், திருவொற்றியூர் ந.இராசேந்திரன், ஓவியர் பெரு.இளங்கோ, துரை.ராவணன், புதுவண்ணை சு.செல்வன், ஏசு.குமார் முதலான தோழர்கள் மாவட்டக் கழக செயல்பாடுகளை விளக்கிப் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. வடசென்னை மாவட்டத்தின் பகுதிக் கழகங்கள் அமைப்பும், அமைக்கப்படும் பகுதிக் கழகங்கள், கிளைக் கழகங்கள் செவ்வனே இயங்கிட உரிய பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணிகளும் 28.6.2015 ஞாயிறு முதல் துவக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2. புதுவண்ணை கழகக் கட்டடம் புத்தாக்கம் பெற்று இயங்கச் செய்யப்பட வேண்டுமெனவும், தந்தை பெரியார் நூலகம் _ படிப்பகம் மீண்டும் திறப்பு விழா செய்யப்பட்டு செவ்வனே இயங்கிடவும் ஏற்ற பணிகளை நிர்வாகிகள் அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3. தந்தை பெரியார் பிறந்த நாள் 17.9.2015 குறித்து விளம்பர சுவரெழுத்துப் பணிகளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. புதுவண்ணை கழகத் தோழர் சு.செல்வன் நன்றி கூறினார். கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவு பெற்றது.
கிளைகள் அமைப்பும் - நிர்வாகிகள் தேர்வும்...
எண்ணூர்
மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்ட முடிவிற்கொப்ப, முதலாவது கிளைக் கழக அமைப்புக் கூட்டம் 28.6.2015 ஞாயிறு மாலை 5 மணிக்கு எண்ணூர் வ.உ.சி. நகரில் அமைந்த கழகத் தோழர் இல்லத்தின் மாடியின் வெளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் ச.குமாரதேவன் தலைமை வகித்தார். மாவட்டக் கழகச் செயலாளர் தே.ஒளி வண்ணன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் வெ.மு.மோகன், திருவொற்றியூர் ந.இராசேந்திரன் முன்னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், பெரம்பூர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சொ.அன்பு, மாவட்டக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் ஓட்டேரி சி.பாசுகர், ஓவியர் பெரு.இளங்கோ, பொ.இராமச்சந்திரன், டே.அந்தோணி, இரா.எழில்மதி, இரா.தமிழ்மதி, சூ.விண்ணரசன், பா.செந்தில்குமார், ப.பஞ்சாட்சரம், டி.ஜி.கனகராசு, மற்றும் தோழர்கள் கலந்து கொண் டனர். கழக நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட தோழர்களிடையே நடந்த கலந்தாய்வுக்குப் பின், எண்ணூர் நகர திராவிடர் கழக நிர்வாகிகளை அறி வித்து வழக்குரைஞர் ச.குமாரதேவன் உரையாற்றினார். நகரத் தலைவர்: மு.மணிகாளியப்பன், துணைத் தலை வர்: தி.நா.கண்ணன், நகரச் செயலாளர்: பொ.இராமச் சந்திரன், துணைச் செயலாளர்: டே.அந்தோணி. கூட்டத் தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள் அனைவரும் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித் தனர். கூட்டத்தின் நிறைவாக எண்ணூர் நகரக் கழகச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் நன்றி கூறினார்.
திருவொற்றியூர்
மாலை 6.30 மணிக்கு திருவொற்றியூர் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் மற்றும் அமைப்புக் கூட்டம் தே.ஒளிவண்ணன் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் ச.குமாரதேவன் தலைமை வகித்தார். மாவட்டக் கழகச் செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், பெரம்பூர் தி.செ.கணேசன், சொ.அன்பு. சி.பாசுகர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் எண்ணூர் வெ.மு.மோகன், திருவொற்றியூர் ந.இராசேந்திரன், ஓவியர் பெரு.இளங்கோ, மு.ஜான்சன், இள.தேன்மொழி, இள.இந்திரா, துரைராவணன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் நகர கழக நிருவாகிகள்
தலைவர்: பெரு.இளங்கோ, துணைத் தலைவர்: பா.பாலு, செயலாளர்: ந.இராசேந்திரன், துணைச் செயலாளர்: சே.தமிழரசி, அமைப்பாளர்: துரை. ராவணன். கூட்டத்தின் நிறைவாக திருவொற்றியூர் நகர கழகச் செயலாளர் ந.இராசேந்திரன் நன்றி கூறினார்.
புதுவண்ணை
மாலை 7.30 மணிக்கு புதுவண்ணை கழக கலந் துரையாடல் அமைப்புக் கூட்டம் கிராஸ்ரோடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது. வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் ச.குமாரதேவன் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டக் கழகச் செயலாளர் தே.ஒளிவண்ணன், எண்ணூர் வெ.மு.மோகன், பெரம்பூர் தி.செ.கணேசன் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள் கி.இராம லிங்கம், ந.இராசேந்திரன், சொ.அன்பு, ஒட்டேரி சி.பாசு கர், ஆ.துரைராவணன், பெரு.இளங்கோ, மு.மணி காளி யப்பன், தி.நா.கண்ணன், த.சந்திரமதன், டி.ஜி.கனகராசு, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத் தோழர்கள் அண்ணாதுரை, எல்லாளன், தா.எட்வின் ஆகியோர் கலந்து கொண்டு ஆக்கப் பணிகள் குறித்துப் பேசினர்.
தலைவர்: தே.மணிவண்ணன், செயலாளர்: சு.செல்வன் ஆகியோர் புதுவண்ணை கழக நிர்வாகி களாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் அறிவித்தார். மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்ற அமைப்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது. மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் ச.குமாரதேவன், செயலாளர் தே.ஒளி வண்ணன், பொதுக் குழு உறுப்பினர் வெ.மு.மோகன் ஆகியோருக்கு கைத்தறி ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. கழகப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தோழர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக வழக்குரைஞர் ச.குமாரதேவன் கைத்தறி ஆடைகள் அணிவித்து சிறப்பு செய்தார்.
வடசென்னை மாவட்டக் கழகப் பகுதிகளின் நிர்வாகிகள் தேர்வு
1.7.2015 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா வளாகத்தில் பெரம்பூர், செம்பியம், வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், புரசைவாக்கம், ஓட்டேரி, எருக்கமாநகர், கொடுங்கையூர், மாதவரம் பகுதிக் கழகங்களின் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்டக் கழக தலைவர் வழக்குரைஞர் ச.குமாரதேவன் தலைமை வகித்தார். செம்பியம் கி.இராமலிங்கம், பெரம்பூர் தி.செ.கணேசன் முன்னிலை வகித்தனர்.
பகுதிக் கழகங்களின் தோழர்களிடையே நடத்தப்பட்ட கலந்தாய்வுக்குப் பிறகு பகுதி வாரியாக கழகப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்னர்.
பெரம்பூர்:
தலைவர்: து.தியாகராசன், செயலாளர்: தி.செ.கணேசன், அமைப்பாளர்: ஜோதி இராமலிங்கம்.
செம்பியம்
தலைவர்: ப.கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்: ச.முகிலரசு, செயலாளர்: டி.ஜி.அரசு, துணைச் செயலாளர்: நா.பார்த்தீபன், அமைப்பாளர்: கு.செங்குட்டுவன்.
வியாசர்பாடி
தலைவர்: ஏ.தணிகாசலம், செயலாளர்: மும்மூர்த்தி
கண்ணதாசன் நகர்
தலைவர்: கு.ஜீவா, செயலாளர்: கண்மணி துரை, அமைப்பாளர்: வி.இரவிக்குமார்
புரவைக்கம்
அமைப்பாளர்: பாலமுருகன்
ஓட்டேரி
தலைவர்: க.சிட்டிபாபு, செயலாளர்: எஸ்.வி.சேகர்
எருக்கமா நகர்
அமைப்பாளர்: ஆர்.மூர்த்தி
மாதவரம்:
அமைப்பாளர்: சி.வாசு
- விடுதலை,29.7.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக