வெள்ளி, 19 ஜூன், 2015

அடையாறில் 250வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு -18.6.2015


18.6.15 மாலை 6 மணிக்கு சென்னை அடையாறில் 250வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடைபெற்றது.

தென்சென்னை மாவட் டம் அடையாறு பகுதி திரா விடர் கழகத்தின் சார்பில் 18.6.2015 அன்று அடை யாறு தொலைத்தொடர் பகம் அருகில் 230ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு ந.மணித் துரை தலைமையில் நடை பெற்றது.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதிபெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன்ஓட்டுநர்கள் அசோக்ராஜிகோ.வீ. இராகவன்சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்றார். 
வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி உரைவட மாவட்டங்களின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஞானசேகரன் உரைசென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தலைமைக் கழகப் பேச்சாளர் செ.தமிழ் சாக்ரட்டீசு உரைமாநில மாணவரணி செயலாளர் பிரின்சு  என் னாரெசு பெரியார் உரைதலைமைக் கழகப் பேச் சாளர் முனைவர்  அதிரடி க.அன்பழகன் சிறப்புரை
 ஆற்றினார்
.



அடையாறு பகுதியில் நடைபெற்ற 
திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு
முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரை

சென்னை அடையாறில் 18.6.2015 அன்று நடைபெற்ற 230ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

சென்னை, ஜுன் 22_ தென்சென்னை மாவட் டம் அடையாறு பகுதி திரா விடர் கழகத்தின் சார்பில் 18.6.2015 அன்று அடை யாறு தொலைத்தொடர் பகம் அருகில் 230ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மணித் துரை தலைமையில் நடை பெற்றது.

தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், மாவட்டச் செய லாளர் செ.ரா.பார்த்தசா ரதி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க. நடராசன், ஓட்டுநர்கள் அசோக், ராஜி, கோ.வீ. இராகவன், சா.தாமோ தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்றார். அடையாறு பகுதி திராவிடர் கழகத்தின் சார் பில் திராவிடர் விழிப் புணர்வு மாநாட்டை நடத்திட தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்ததன் காரணமாக இம்மாநாடு ஒத்திவைக்கப் பட்டு அதைத்தொடர்ந்து திராவிடர் கழக வழக்கு ரைஞர் அணியின் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நீதிமன்றத்தின் அனுமதிபெற்ற பிறகு இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. மேலும், புரட்சிக்கவிஞர் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும் இணைத்து திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு சிறப்புற நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு  என் னாரெசு பெரியார், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தலைமைக் கழகப் பேச்சாளர் செ.தமிழ் சாக்ரட்டீசு எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச் சாளர் முனைவர்  அதிரடி க.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

ஒரு கோடி அறிவிப்பு

சிறப்புரையில் குறிப் பிடும்போது, புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் பிறந்த நாளும் இணைக் கப்பட்டு மிகச்சிறப்பாக இந்த மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு விட்டது. அந்தத் தடையை கழகத்தின் வழக்குரைஞர் கள் நீதிமன்றம் சென்று உடைத்து நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப் படையிலே இந்த மாநாடு நடைபெறுகிறது. எனவே, நீதிமன்றத்துக்கு, சிறப் பான தீர்ப்பைத் தந்து நீதியை நிலைநாட்டிய நீதி யரசருக்கு இந்த மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆரியர்களின் சூழ்ச்சி களால் கல்வியைப் பெற முடியாமல் திராவிடர்கள் காலங்காலமாக அடக்கப் பட்டு வந்தார்கள். ஆனால் தந்தை பெரியார் உழைப் புக்குப்பிறகு தற்பொழுது அனைவருமே கல்வி உரிமை பெற்று முன் னேற்றங்களை அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரியப் பார்ப்பனர் இனத்தவர்களில் இரு பாலரிலும் கையெழுத்துப் போடத்தெரியாதவர்கள் என்று ஒரேயொருவரை அழைத்துவந்தால் ஒரு கோடி ரூபாய் அளிப்ப தாக அறிவித்ததுடன், அதே நேரத்தில் திராவிட இனத்தவர்கள் இன்னமும் கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள் இருந் தால் ஒரு ரூபாய்கூட அளிப்பதாக கூற மாட் டேன். ஏனென்றால், ஆரி யத்தால் கல்வி உரிமை பெறாத ஏராளமாக இருக் கும் முதியவர்களை கொண்டு வந்துவிடுவார்கள் என்று அதிரடி அன்பழகன் பேசும் போது குறிப் பிட்டார்.

மேலும் அவர் பேசுகை யில், தகுதி, திறமை பேசும் பார்ப்பன வகுப்பிலிருந்து ஒருவர்கூட அண்மையில் வெளியான மருத்துவக் கல்விக்கான முதல் தகுதி யிடங்களில் தேர்வாக வில்லை. ஆனால், வாய்ப்பு அளிக்கப்பட்டபின்னர் தாழ்த்தப்பட்டவர், பிற் படுத்தப்பட்டவர் என்று நம்முடைய திராவிட இனத்தவர்கள்  கட்ஆப் 200க்கு 200 மதிப்பெண் கள்பெற்று திறமைகளு டன் இருக்கிறார்கள் என் பதை நிரூபித்துவருகிறார் கள். முற்றிலும் கண் பார்வை இழந்த மாற் றுத்திறனாளிப் பெண் அய்.எப்.எஸ் தேர்ச்சி பெற்று சாதனை படைத் துள்ளார். சி.ஏ. படிப்பில் உளுந்தூர்ப்பேட்டையை அடுத்துள்ள சங்கராபுரத் தில் ஆட்டோ ஓட்டுநரான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

50 ஆண்டு காலத்திற்கு முன்பாக பார்ப்பனர்கள் மட்டுமே  மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், நீதிபதி கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் என்கிற நிலை இருந்தது, தந்தைபெரியார் ஆற்றிய அரும்பெரும்பணிகளுக்குப் பின்னர் அனைத்து இடங் களிலும் நம் ஆட்கள் வந் துள்ளார்கள். இவைகளுக்கு காரணம் தந்தை பெரியார். திராவிடர்கழகத்தின் பணி. தந்தை பெரியார் என் கிற தலைவர் பாடுபட்ட தால், எவ்வளவு பெரிய புரட்சிகள் நடைபெற்ற தால், எவ்வளவோ பெரிய மாற்றங்கள் நடைபெற் றுள்ளன. பத்தாம்வகுப் பில் 41பேர் மாநிலத்தில் 500க்கு 499 மதிப்பெண் கள் பெற்றுள்ளனர். இது எவ்வளவு பெரிய சாதனை? ஆகவே, திராவிடர்கள் விழிப்புணர்வு பெற வேண் டும் என்பதற்காகவே இந்த மாநாடு என்று குறிப் பிட்டார். முன்னதாக வட மாவட்டங்களின் மாநில அமைப்பு செயலாளர் வெ. ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வழக் குரைஞர் ம.வீ.அருள் மொழி உள்பட பலர் உரையாற்றினார்கள்.

கலந்துகொண்டவர்கள்

வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி, தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், வட சென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண் ணன், சைதை தென்றல், பெரியார் களம் இறைவி, மு.பவானி, தரமணி மஞ்சு நாதன், கலையரசன், க. தமிழ்செல்வன், பெரியார் சேகர், மயிலை பொறியா ளர் ஈ.குமார், செ.இராமச் சந்திரன், முத்துராஜ், அ.செல்வராசன், விசு, முகிலன், திருமலை, ச. துணைவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ச.சந்தோஷ், நன்றி கூறினார்.
-விடுதலை,22.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக