தென் சென்னையில் மயிலை - நொச்சி நகர் பகுதி சார்பில் காமராசர் சாலை(கடற்கரை சாலை) வானொலி நிலையம் எதிரில், பெரியார் திடலில் 14.4.15ல் நடைபெறும் ''தாலி அகற்றும் நிகழ்ச்சி-மாட்டுக்கறி விருந்து'' நிகழ்ச்சி குறித்து விளம்பர நெகிழி 12.4.15ம் நாள் வைக்கப்பட்டது
பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை இதோ அகற்றிக் கொள்கிறோம்
தந்தை பெரியார் தம் சுயமரியாதை வாழ்வே எங்கள் சுக வாழ்வு!
என்று சூளுரைத்தனர் கழக மகளிர்
21 இணையர்கள் தாலியை அகற்றிக் கொண்ட புரட்சிகரமான நிகழ்ச்சிகள்
சென்னை, ஏப்.14-_ பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றிக் கொள்கிறோம். தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை வாழ்வே எங்கள் சுகவாழ்வு என்று கூறி 21 இணையர் தாங்களாகவே முன்வந்து தாலியை அகற்றிக் கொண்டனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்தப் புரட்சிகரமான நிகழ்ச்சி நடந்தேறியது.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை பெண் களின் அடிமைச் சின்னமாம் தாலியகற்றும் விழா சென்னை பெரியார் திடல் -_ நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஏன் தாலி அகற்றம்? தன்னிலை விளக்கம்
பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொள்ள முன்வந்த இணையர்கள் (துணைவர், துணைவியர்கள்) தாலியை அகற்றிக் கொள்வது ஏன் என்று அவர்களாகவே முன்வந்து கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
பெண்களுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக அணிவதுதான் தாலி என்றால், ஆணுக்குத் திருமணம் ஆகி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?
ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்பதுபற்றி அடுத்தவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே கூட கெட்ட புத்தி தானே? - அடுத்தவர் உரிமையில் தலையிடுவதுதானே?
ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்பதுபற்றி அடுத்தவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே கூட கெட்ட புத்தி தானே? - அடுத்தவர் உரிமையில் தலையிடுவதுதானே?
ஒருவர்மீது மற்றவரின் நம்பிக்கை
நான் அவரை மதிக்கிறேன்; -நம்புகிறேன் - _ அவர் என்னை மதிக்கிறார், நம்புகிறார். இது தானே வாழ் விணையர் என்பது - -_ தோழமை என்பது; தாலி என்று ஒன்று கட்டுவது நம்பகத் தன்மையில்லாதது தானே?
இணையர்கள் தத்தம் கருத்துக்களைச் சரமாரி யாகப் பொழிந்து தள்ளினர். தந்தை பெரியார் கொள்கை வழியே சிறந்தது _ திராவிடர் கழகம் சரியான பாசறை. எங்கள் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கிறது, சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு; மற்றவர்களும் எங்களை மதிக்கிறார்கள் மற்றவர்களும் எங்களைப் பின் பற்றுங்கள் என்று பூரிப்போடு உணர்ச்சிகரமாகக் கூறி னார்கள்.
தமது துணைவர் வர இயலாத நிலையில் அவரின் ஒப்புதலோடும் மனம் மகிழ்ந்து இந்த அடிமைச் சின்னத்தை அகற்றிக் கொள்கிறேன் என்று நான்கு பெண்கள் கூறினார்கள்.
இணையர் வராத நிலையிலும்
தனது இணையர் வர இயலாத சூழ்நிலையில் அவராகவே முன்வந்து கழற்றிக் கொடுத்த தாலி இதோ
என்று ஒப்படைத்தார் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன்.
21 இணையர்
21 இணையர்கள் அடிமைத் தளையை அகற்றிக் கொண்டனர். ஒவ்வொரு அகற்றலின்போதும். அவர்கள் தெரிவித்த சாட்டையடி கருத்துக்களின் போதும் விண்முட்டும் முழக்கங்களும், கரஒலிகளும் மன்றத்தையே கிடுகிடுக்க வைத்தன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், தஞ்சை கலைச்செல்வி, (மாநில மகளிர் அணி செயலாளர்),க. பார்வதி (தலைமை செயற்குழு உறுப்பினர்), திருமகள் (தலைமை செயற்குழு உறுப்பினர்), உமா செல்வராஜ் (மண்டல மகளிரணி செயலாளர்), வழக்குரைஞர் (தெ. வீரமர்த்தினி, கு. தங்கமணி, கனகா, க. வனிதா, சுமதி முன்னிலையிலும் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சிகரமான நிகழ்ச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், தஞ்சை கலைச்செல்வி, (மாநில மகளிர் அணி செயலாளர்),க. பார்வதி (தலைமை செயற்குழு உறுப்பினர்), திருமகள் (தலைமை செயற்குழு உறுப்பினர்), உமா செல்வராஜ் (மண்டல மகளிரணி செயலாளர்), வழக்குரைஞர் (தெ. வீரமர்த்தினி, கு. தங்கமணி, கனகா, க. வனிதா, சுமதி முன்னிலையிலும் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சிகரமான நிகழ்ச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் எழுச்சியுடன் நடைபெற்றது.
கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அறிமுகவுரை யுடன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்புச் செய்தார்.
நிகழ்ச்சியின் அவசியத்தைத் தமிழர் தலைவர் தொடக்கத்தில் விளக்கினார்.
பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொள்ளும் மாட்சிகள்
(சென்னை பெரியார் திடல், 14.4.2015, நேரம் காலை 7 மணிமுதல் 8
மணிவரை)
விடுதலை,14.4.15
தாலி அகற்றும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்ந ஆந்திர மாநில(தெலுங்கானா உட்பட) பிரஜா நாத்திக சமாஜத்தை சேர்ந்த ஜி.டி.சாரய்யா குழுவினருடன் தென் சென்னை திராவிடர் கழக பொறுப்பாளர்கள்.-14.4.15(பெரியார் திடல்)
தாலி அகற்றும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்ந ஆந்திர மாநில(தெலுங்கானா உட்பட) பிரஜா நாத்திக சமாஜத்தை சேர்ந்த ஜி.டி.சாரய்யா குழுவினருடன் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள்.-14.4.15(பெ
நக்கீரன் இணையம்
செவ்வாய்க்கிழமை, 14, ஏப்ரல் 2015 (10:7 IST)
பெண்ணடிமைத்தளையாம் தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி ( படங்கள் )
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா, சென்னை பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி மாட்டுக்கறி விருந்து - பெண்ணடிமைத் தளையாம் தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் 21 ஜோடிகள் பங்கேற்றனர். இவர்கள் ஒவ்வொருவராக மேடையேறி தாலியை அகற்றினர். தாலியை அகற்றுவதற்கான காரணத்தையும் விளக்கிகூறினர். கன்னட, மலையாள பெண்களும் இந்நிகழ்ச்சியில் தாலியை அகற்றினர்.
தாலி அகற்றும் நிகழ்ச்சி முடிந்தபின்னர், மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தடைகோரியும் கோர்ட்டுக்கு சென்றனர். இந்த தடைகளை உடைத்து, ஐகோர்ட் அனுமதி பெற்றுது. தனி நீதிபதி அனுமதி அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. அதற்குள் இந்நிகழ்ச்சிக்கு தடை கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து போலீசார், இந்நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று கூறினர். மேல்முறையீடு தானே செய்திருக்கிறது அரசு. கோர்ட் இன்னும் தீர்ப்பு கூறவில்லையே என்று கூறிவிட்டு, நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர். காலை 8.10 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது.
இதற்கிடையில் காலை 8 மணிக்கு மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையை அடுத்து, காலை 9.45 மணிக்கு மேல், நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் அமர்வு தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
BBC இணையம்
நீதிமன்ற தடை உத்தரவுக்கு முன்பாக தாலி அகற்றும் விழா
- 14 ஏப்ரல் 2015
திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தவிருந்த அம்பேத்கர் பிறந்த தின விழாவிற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தடை விதிப்பதற்கு முன்பாக, தாலி அகற்றும் விழா நடத்தி முடிக்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஏப்ரல் 14ஆம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு முன் அனுமதிபெறவில்லையென்று கூறி சென்னை நகரக் காவல்துறை தடைவிதித்தது. இதையடுத்து, இந்தத் தடையை நீக்கக் கோரி, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை திங்கட்கிழமை மாலையில் விசாரித்த நீதிபதி ஹரி பரந்தாமன், நிகழ்ச்சியை அமைதியாக நடத்துமாறும் அதற்கு காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் கூறினார்.
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று அதிகாலையிலேயே இந்த மனு விசாரிக்கப்பட்டது.
அதே நேரத்தில், பெரியார் திடல் முன்பாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
21 பெண்கள் தாலி அகற்றினர்
விழாவை காலை 10 மணிக்குத் துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தாலி அகற்றும் விழா ஏழு மணிக்கே துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த விழாவில் பங்கேற்று 21 பெண்கள் தங்கள் தாலிகளை அகற்றினர்.
இதற்கிடையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவு காலை 10 மணியளவில் வந்து சேர்ந்ததும், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின் பிற நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டன. அதற்குப் பிறகும், தாலியை அகற்றுவதற்காக வந்த தம்பதிகளை திராவிடர் கழக நிர்வாகிகள், நீதிமன்ற உத்தரவை சொல்லி, திருப்பி அனுப்பிவைத்தனர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்ததுத்துவ சக்திகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும் நடந்துகொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தாலி குறித்த விவாதம் நடத்தப்படவிருந்த நிலையில், சில இந்து அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக, அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. அதற்குப் பின் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது டிபன் பாக்ஸ் குண்டும் வீசப்பட்டது.
இதையடுத்து, நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் சார்பில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதற்குப் பல இந்து அமைப்புகள் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்15.4.15
சென்னை, ஏப்.16- திராவிடர் கழகம் நடத்திய
நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்ததும் தி.க.வினரைக் கைது செய்ததும் - கருத்துரிமை
மீதான தடுப்பு நடவடிக்கைகளே என்று சி.பி.அய்., சி.பி.எம். கட்சி செயலா ளர்கள்
கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
சி.பி.அய்.
இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக ஒரு மித்
தக் கருத்துள்ள வர்களை ஒன்றி ணைக்கும் திரா விடர் கழகத்தின் முயற்சிகள்மீதான
தாக்குதலில் இந்து த்துவா சக்திகள் ஈடுபடுகின்றன. தி.க. தோழர்கள் கைது அவர்கள்
மீதான தாக்குதலும் கண்டிக்கத் தக்கது என்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி யின்
தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
மாட்டிறைச்சி உண்ணுவது, தாலி அகற்றும் நிகழ்வு என தனது கொள்கை
நிலைக்கேற்ப நீதிமன்ற அணுகு முறைகளுக்குப்பின் ஜன நாயக முறையில் அமைதியாக, திராவி டர் கழக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள
பெரியார் திடலில் மேற் கண்ட நிகழ்வு நடை பெற்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிவ சேனா அமைப்பினர்
பெரியார் திடலுக் குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள் ளனர். திராவிடர் கழக
தொண்டர்கள் சிலர் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு
வேலூர் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைந்
துள்ள இடத்திற்கு மிக அருகில் உள்ள திரா விடர் கழக தலைமை அலுவல கத்திற்கு அருகில் நடைபெற்றுள்ள
இத்தகைய செயல்கள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட
வன்முறையாளர்கள் இவை வெறும் திராவிடர் கழகத் தின் குறிப்பிட்ட இயக்கத்திற்கான
எதிர்ப்பு மட்டுமல்ல, பி.ஜே.பி மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கு
எதி ராக கூர்மையான கருத்துகளை முன் வைக்கிற, ஒருமித்த வேறு இயக்கங் களை ஒன்றிணைக்கிற திராவிடர் கழக முயற்சிகள் மீதான
தாக்குத லாகவே இதனை கருதுகிறோம்.
ஜனநாயகத்தில் கருத்துக்கு, எதிர் கருத்து எனும் பண்புக்கு மாறாக, கருத்து சுதந்திரத்தை வன்முறைகள் மூலம்
தகர்க்கும் சிவசேனா அமைப் பினரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக
கண்டிப்பதுடன் சிறைப்பட்டுள்ள திராவிடர் கழகத்தின் தொண்டர்களை உடனே விடுதலை
செய்யுமாறும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும்
நிகழ்ச்சியும், மாட்டுக் கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறை
விதித்திருந்த தடையை ரத்து செய்தும், நிகழ்ச்சிக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும்
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கேற்ப ஏப்ரல் 14 அன்று காலை தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. ஆனால் அன்று
மாலையில் இந்துத்துவ சிவசேனா அமைப்பைச் சார்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் அத்து
மீறி நுழைந்து அங் கிருந்த திராவிடர் கழகத்தினரின் மீது கண் மூடித்தன மான
தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்த வன்முறைத் தாக்குதல் சென்னை மாநகர காவல்துறை
ஆணையரின் அலுவலகத்திற்கு முன்பே நடந்துள்ளது.
இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட்
கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத் தையொட்டி தாலி குறித்த விவாதத்தை ஒரு தனியார்
தொலைக்காட்சி நிறு வனம் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது. அந்த தொலைக்காட்சி நிறுவனத்
திற்குள்ளேயே இந்துத்துவ மதவெறி சக்திகள் அத்துமீறி புகுந்து வன்முறைத் தாக்குதலை
நிகழ்த்தி நிகழ்ச்சியை ஒளி பரப்ப விடாமல் தடுத்தது.
இதனைத் தொடர்ந்து இப்போது டாக்டர் அம்பேத்கர் 125வது பிறந்த தினத்தன்று சாதி பாகுபாடு, பாலின ஒடுக்குமுறை, மூடநம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராடிய
தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பும் வகையில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் மீதும் மதவெறி சக்திகள்
வன்முறையை நிகழ்த்தியுள்ளன.
தாலி அணிவதும் - அகற்றுவதும், தாலி அணி யாமல் இருப்பதும் தனிநபர் விருப்பம்
சார்ந்ததாகும். அதுபோல் கருத்துக்களை வெளிப்படுத்தும், பரப்பும் சுதந்திரத்தை அரசியலமைப்புச் சட்டம்
வழங்கி யுள்ளது. இவற்றைக் கருத்தில் கொள் ளாமல் தமிழக காவல்துறை இந்நிகழ் வுக்கு
தடை விதித்தது தனிநபர் உரிமைக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும். எனவே கருத்துரிமை - மாற்றுக்
கருத்துக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகிற இந்துத்துவ மதவெறி
சக்திகளின் செயல் களுக்கு துணைபோகாமல் மதவெறி சக்திகளின் வன்முறைச் செயல்களை
தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும்; அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள தனிநபர் உரிமை, கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை தமிழ கத்தில் நிலைநிறுத்திட
வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு
தமிழக அரசை வலியுறுத்துகிறது. திராவிடர் கழகத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்
நடத்தியவர்கள் அனை வரையும் உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்
கொள்ள வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை
வலியுறுத்துகிறது.
இவ்வாறு சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.
ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.
-விடுதலை,16.4.15
இந்தியன்
எக்ஸ்பிரஸ் என்னும் பார்ப்பனீய முதலாளித்துவ ஏடு திராவிடர் கழகத் தலைவர் தலைமையில்
நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டப்பட்ட படத்தினை எடுத்துப் போட்டு
(படம்: பக்கத்தில் காண்க) பூணூலைக் கொஞ்சம் உருவி விட்டு, தன் முதுகைத் தானே தட்டிக்
கொண்டு இருக்கிறது. லண்டனில் வாழக்கூடிய ஹரிஷ் கமுகக்குடிமாரிமுத்து - லண்டன்
அவர்கள் எழுதியுள்ள இந்தக் கடிதம் தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களின் முதுகைக்
குத்தித் தட்டி எழுப்பக் கூடியதாகும்.
In this video grab of the wedding of Harish and Sneha,
said to have taken place in Thanjavur in 2011, DK leader K. Veeramani is
seen handing over the thali (cirlcled) to the groom. (இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.4.2015)
இது எங்க சுயமரியாதைத் திருமண காணொளி. இதனை பகிர்ந்து, சுயமரியாதைத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு பல்லாயிரகணக்கானோருக்கு தெரிய
வைச்சதுக்கு நன்றி.
எங்கள் சுயமரியாதைத் திருமணம் நடக்கும் முன்னர்
தயாரித்த, ஏன் 'சுய மரியாதைத் திருமணம்'ங்கிற கட்டுரை
இது:
சுயமரியாதைத்
திருமணம் எங்கள் விருப்பப்படி, அய்யர் (பிராமணர்/பார்ப்பனர்) இல்லாமல் நடத்தனுங்கறது தான் மிக முக்கிய
குறிக்கோள்.
ஏன்னா - இந்து திருமண முறையில சொல்ற வேத
சமஸ்கிருத மந்திரத் தோட பொருள் - மணப்பெண்ண மூனு ஆம்பள கடவுளுக்கு கல்யாணம்
செஞ்சிட்டு அப்புறமா நாலாவது புருசனா மணமகன திருமணம் செஞ்சு வெக்கிறாங்க. அது
எங்கள் சுயமரி யாதைக்கு இழுக்குன்னு நாங்க நெனக் கிறோம். நெறய பேரு இத தெரியா
மலேயே 'இந்து' முறைப்படி வேத சமஸ்கிருத முறையில் திருமணம் செய்யறாங்க.
எந்த பெண்ணாவது தனக்கு தாலி கட்டிய புருசன், நாலாவது கணவன் அப்படின்னா, ஆணுக்கு சுயமரியாதை பொத்துக்குதோ இல்லயோ
பெண்ணுக் காவது சுயமரியாதை வேணாமா!
எங்கள் திருமணம், எங்க ஆத்தா எங்க பெற்றோர் ( பையன் வீடு, பொன்னு வீடு) ஆகியோர் விருப்பப் படி நல்ல நேரத்தி லேயே குறிக்கப் பட்டது
மற்றும் தாலி அணிவித்தே திருமணமும் நடத்த விருப்ப பட்டாங்க.
எங்கள் சுயமரியாதை திருமணத்தை தலைமை ஏத்து
ஆசிரியர் நடத்தி வெச்சாங்க. அதுவும் நல்ல நேரம்ன்னு சொல்ற நேரம் முடிஞ்சவொடனதான்
தாலி எடுத்து கொடுத்தாங்க.
திருமணம் முடிஞ்சவுடன், ஆசிரியர் கிட்ட "அய்யா தாலி கட்டாம
திருமணம் செய்ய முடியலங்க அய்யா" ன்னேன்.
அதுக்கு ஆசிரியர், "அதெல்லாம் பரவாயில்லை. பெற்றோருக்கும் சங்கட
மில்லாம நடந்துக்கனும். அப்பறமா மனசொத்து நீங்க விருப்பப்படும் போது
கழட்டிக்குங்க. அவ்ளோதான் !"-ன்னாங்க.
அங்கேயே மேடையிலேயே, எங்க அம்மா அப்பாவ கூப்பிட்டு, இந்த மாதிரி நான் தாலி பத்தி சொன்னதயும் சொன்
னாங்க.
ஆசிரியர் எங்க ஆத்தாகிட்ட "என் னம்மா சந்தோசமா!"
ன்னு கேட்டாங்க.
எங்க ஆத்தாவும் மன நிறைவோட கை கூப்பி வணக்கம்
சொல்லி, பொக்க வாயோட சிரிச்சாங்க.
நிற்க,
நாங்கள் லண்டன் வந்த பிறகு தாலிய உடனேயே கழட்டிட்டோம். அந்த "தங்க தாலி
செயின்" ஒரு ஓரமா தூங்கிகிட்டு இருந்தது. அந்த தாலியை ஏதாவது நல்ல செயலுக்கு
உபயோகிக்கலாம்ன்னு காத்துகிட்டு இருந்தோம்.
அப்பதான் தொல்.திருமாவளவன் அவங்க ஒரு தடவ
லண்டனுக்கு ஈழத் தமிழர் கருத்தரங்கத்துக்காக வந்திருந்தாங்க.
தொல்.திருமாவளவன் அவங்களோட சுயநலமில்லாத சமுதாய
பணிய ஊக்குவிக்க ஏதாவது செய்யனும்ன்னு தோனிச்சு. திருமாவளவனின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, எங்கள் வீட்டில் உறங்கிய தங்க தாலிய, அய்யா எழுச்சி தமிழர் திருமாவளவன்கிட்ட
மனமுவந்து நன்றி உணர்ச்சியோடு கொடுத்திட்டோம்.
நிற்க,
எங்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் பிறந்த
நேரம் என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. வாழ்விணையரோ மகன் பிறந்த நேரத்தை
பற்றி கேட்டதே இல்லை! ஆகையால ஜாதகம்ங்கிற மூட நம்பிக்கையிலேந்தும் வெளிய வந்து
லண்டனில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். லண்டன் முருகன் கோயில் பக்கத்தில கூட வாடகை
வீட்டில் குடி இருந்திருக் கோம். இதுவரை ஒரு தடவை கூட எங்கள் சுயமரியாதையை
பறிக்கும் லண்டன் முருகன் கோவிலுக்கு போனது கூட இல்லை. ஏன்னா எங்களுக்கு கடவுள்
நம்பிக்கையும் இல்லை.
நிற்க,
தமிழர்கள் நாம பெரும்பாலும் நம்ம குழந்தைக்கு
தமிழில் பேர் வைக்காம 'சமஸ்கிருதத்தில்' பேர் வெச்சிட்டு, ஆனாலும் நாம தமிழர்ன்னு சொல்றது மாதிரி ரெட்டை
நிலை ஏமாத்து வேலையோட நடந்துக்கக் கூடாதுன்னு, எங்கள் மகனுக்கு தமிழின் முதல் உயிர் எழுத்தான 'அ' வை பெருமை படுத்தும் வகையில் 'அகரன்' அப்படின்னு வெச்சோம்.
நிற்க,
சுயமரியாதை திருமணம்ங்கிறது அடிப்படையில் 'சுயமரியாதையை' மீட்டெடுப்பது. அதாவது அய்யர் எனும் பார்ப்பனரை வச்சி செய்யற வேத சமஸ்கிருத புரோகித
மறுப்பு திருமணம். தாலி அணியக்கூடாதுங் கறது சிறப்பானதுன்னாலும், ஒரு படி ஏறினாதான அடுத்த படி ஏற முடியும் ? எட்டாவது பாஸ் பன்னினாதானே பத்தாவது பாஸ் பன்ன
முடியும் ? இல்ல நா நேரடியா டிகிரிதான் முடிப்பேன்னு 'பெட்ருமாக்ஸ் லைட்டேதான் வேனும்'ன்னு உட்காரத்தான் முடியுமா!
இது ஒரு volutionary process ! ! மகிழ்ச்சியா !
வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு !
-விடுதலை,20.4.15
நான் சாப்பிடுவதை முடிவு செய்ய நீ யார்?
கமல்காசன் கேட்கிறார்
பார்ப்பனர்கள்
மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என இந்து மதத்தின் புனித நூல்களிலேயே
குறிப்பிடப்பட்டுள்ளது, என நடிகர் கமல்காசன்
கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன் கருத்துகளைச் சொல்வதில் இம்மியளவு கூட
தயக்கம் காட்டாதவர் கமல்காசன். சமீபத்தில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின்போது, மகாராஷ்ட்டிராவில்
மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு
பதிலளித்த கமல், ஒருவர் என்ன
சாப்பிடவேண்டும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை
அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.
மாடுகளைக்
கொல்லுவதைத் தடுக்கவேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக்
கொல்லுவதையும் கண்டிப்பாகத் தடுக்கவேண்டுமே. சில இடங்களில் பிராமணர்கள் மீன்
சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்லுவதையும் தடுக்கவேண்டும்.
வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி
சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் மாட்டுக்கறி
சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது என்றார்.
-விடுதலை,23.4.15
-நக்கீரன்,ஏப்ரல்29,2015
விடுதலை ஞாயிறுமலர் 28.3.15பக்கம்-7
அதிர்வை ஏற்படுத்திய ஏப்ரல் 14 முன்னும் பின்னும்
- கவிஞர் கலி.பூங்குன்றன்
திராவிடர் கழகத்தின் சார்பில்- _ அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (14.4.2015) சென்னை பெரியார் திடலில், பெண்ணடிமைச் சின்னமாம் தாலி அகற்றிக் கொள்ளுதல் விழாவும், மாட்டுக்கறி விருந்தும் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்கள். அது தொடர்பான தடைகள் _ விமர்சனங்கள் _ கைது நடவடிக்கைகள் _ சர்ச்சைகள் தொடர்ந்து-கொண்டே இருக்கின்றன. இவைபற்றி என்றென்றும் பதிய வைக்கும் வகைகளில் விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.
1. இந்தப் பிரச்சினையின் மூலம் என்ன?
சென்னையில் உள்ள புதிய தலைமுறை என்னும் தனியார்த் தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்குப் பெருமையா? சிறுமையா? எனும் தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு 8.3.2015 ஞாயிறன்று அது ஒளிபரப்பப்படும் என்று தேதியையும் அந்தத் தொலைக்காட்சி அறிவித்தது.
இந்த அறிவிப்பினைக் கண்ட மாத்திரத்திலேயே இந்துத்துவாவாதிகள், காவிப் படையினர் அந்த நிறுவனத்துக்குப் பல அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். தொலைப்பேசி மூலம் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தனர். நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் வன்முறைகள் வெடிக்கும் என்று அச்சுறுத் தினர். ஆட்சிச் செல்வாக்குள்ளவர்களும் தலையிட்டுத் தடுக்க முயற்சித்தனர்.
இந்த நிலையில் 8.3.2015 அன்று விடியற்காலை அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியாற்றியவர்களையும், (ஒரு பெண் உட்பட) தாக்கினர்; கேமிராக்களையும் உடைத்தனர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் பரமேஸ்வரன் மற்றும் அவ்வமைப்பினைச் சேர்ந்த மனோகரன், இளங்கோ, முகுந்தன், அரிபாபு, ராஜா, ஜெயக்குமார், அய்யப்பன், சீனிவாசன், குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்தோடு வன்முறைகள் ஓய்ந்திடவில்லை.
12.3.2015 அன்று விடியற்காலையில் 3 மணிக்கு அதே தனியார் தொலைக்காட்சி பணிமனைக்குள் இரண்டு டிபன் பாக்ஸ் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஒரு குண்டு அலுவலகத்தின் உட்பகுதியிலும், மற்றொன்று பிரதான நுழைவுவாயில் அருகிலும் வெடித்தன. இது தொடர்பாக ஆறுபேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவர் இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயபாண்டியன் என்பவர் ஆவார். எனது உத்தரவின் பேரில்தான் வெடிகுண்டுகளை வீசினார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் சிவகங்கை மகாதேவன் (27), திண்டுக்கல் முரளி (32), உசிலம்பட்டி சிவா (22), திருவண்ணாமலை சரவணன் (24), மதுரை வேணுகோபால் (29) ஆகியோர் ஆவர். 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. குண்டு தயாரிக்க உதவிய மதுரை ராஜாவும் கைது செய்யப்பட்டார்.
2. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தது என்ன?
புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்தி, கருத்துரிமையைப் பறிக்கும் கேவலத்தில் ஈடுபட்டுள்ள இந்துத்துவ சக்திகளின் பிற்போக்குத்தனத்தைக் கண்டிக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 18.3.2015 மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்தி, கருத்துரிமையைப் பறிக்கும் கேவலத்தில் ஈடுபட்டுள்ள இந்துத்துவ சக்திகளின் பிற்போக்குத்தனத்தைக் கண்டிக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 18.3.2015 மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரசின் முன்னணித் தலைவர் பீட்டர் அல்போன்சு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அதன் பொருளாளர் குணங்குடி அனிபா, பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கக் காப்பாளர் பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞாநி முதலியோர் பங்கு கொண்டு கருத்துகளைக் கூறினர்.
கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கருத்துரிமைக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் இலட்சியக் கண்ணோட்டத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (14.4.2015) சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டிறைச்சி விருந்தும் நடைபெறும் என்று அறிவிக்க, பலத்த கரவொலி ஆரவாரத்துடன் இடியோசை எனக் கிளம்பியது.
தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். ஒத்த கருத்துள்ளவர்கள் வரலாம். தாலியை அகற்றியவுடன் மாட்டுக்கறி விருந்து நடைபெறும். பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தார்.
3. திராவிடர் கழகத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 (2015) அன்று சென்னை பெரியார் திடலில் ஆணின் உடைமைதான் பெண் என்பதற்கான அடையாளச் சின்னமான தாலியைக் கண்டித்து தாலியகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் _ இது எங்கள் கழகத்தின் கொள்கையைச் சார்ந்தது _ சட்டப்படியானது _ சுயமரியாதைத் திருமணச் சட்டப்படி (1968) தாலி கட்டாயம் இல்லை _ அதேபோல மாட்டுக்கறி உணவு உண்பது என்பது தனி மனிதன் விருப்பத்தையும், உரிமையையும் சார்ந்தது.
அதில் தலையிட அரசுக்கோ, வேறு எந்த சக்திகளுக்கோ உரிமை கிடையாது என்று குறிப்பிட்டு இந்நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் சென்னைக் காவல்துறை ஆணையிடம் 29.3.2015 நாளிட்ட _ திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கையொப்பமிட்ட கடிதம் திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோரால் 30.3.2015 அன்று மாலை அளிக்கப்பட்டது.
அதில் தலையிட அரசுக்கோ, வேறு எந்த சக்திகளுக்கோ உரிமை கிடையாது என்று குறிப்பிட்டு இந்நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் சென்னைக் காவல்துறை ஆணையிடம் 29.3.2015 நாளிட்ட _ திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கையொப்பமிட்ட கடிதம் திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோரால் 30.3.2015 அன்று மாலை அளிக்கப்பட்டது.
சட்டப்படியாகவும், கொள்கைரீதியாகவும் திராவிடர் கழகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்த்துப் போராடுவோம் _ பெரியார் சிலையை உடைப்போம் என்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
4.காவல்துறையின் நடவடிக்கை என்ன?
நீதிமன்ற ஆணை என்ன?
சென்னை பெரியார் திடலில் புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை யொட்டி, பெண்கள் தாமாகவே முன் வந்து தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி விருந்தும், கருத்தரங்கமும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது (14.4.2015). இது குறித்து 29.3.2015 அன்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னைக் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு நேரில் கடிதம் கொடுத்திருந்தார்.
திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சியை எதிர்த்து இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை - தனது சேம்பரில் விசாரித்த நீதிபதி திரு.பி.என்.பிரகாஷ் அவர்களின் ஆணையை மேற்கோள்காட்டி, சென்னை வேப்பேரி காவல் நிலைய உதவி ஆணையர் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து 12.4.2015 அன்று கழகத் துணைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தார்.
தடையாணை தவறானது என்று விளக்கி, அன்று மாலையே திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வேப்பேரி காவல்துறை உதவி ஆணையரிடம் பதில் கடிதம் கொடுத்ததோடு (12.4.2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையை ரத்து செய்யுமாறு வழக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. (13.4.2015)
நீதிபதி திரு. டி. அரிபரந்தாமன் அவர்கள் தனது தீர்ப்பில் வேப்பேரி உதவி ஆணையரின் ஆணைக்குத் தடை விதித்து, திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் விழாவுக்கு அனுமதி கொடுத்ததோடு, காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தார்.
அதன்படி ஏப்ரல் 14 அன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை 21 இணையர்கள் அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொள்ளும் புரட்சிகரமான நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக நடைபெற்றது.
காலை 8.30 மணிக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ சென்னை நேரு விளையாட்டு அரங்கின் நுழைவுவாயிலில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.
இதற்கிடையே வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் சார்பில் நீதிபதிகள் சதீஷ், கே.அக்னிஹோத்திரி, திரு எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
கழகத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் தியாகராசன், த.வீரசேகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. டி. அரிபரந்தாமன் அவர்களின் ஆணை அடிப்படையில் சென்னை பெரியார் திடலில் இன்று காலை தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துவிட்டது; அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாலையும் அணிவித்துவிட்டார் என்று எடுத்துக் கூறினர்.
அதன்பின் தனி நீதிபதி திரு. டி.அரிபரந்தாமன் ஆணைக்கு நீதிபதிகள் தடை விதித்தார்கள்.
தடை விதிப்புக்கு முன்னதாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் பெண்ணடிமையின் சின்னமாம் தாலி அகற்றும் புரட்சிகரமான நிகழ்ச்சியும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பும் நடந்தேறிவிட்டன.
இரு நீதிபதிகள் கொடுத்த தடை ஆணையைத் தொடர்ந்து, நடக்கவிருந்த அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கமும், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியும் நிறுத்தி வைக்கப்பட்டதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.
தடையாணையை எதிர்த்து உரிய வகையில் வழக்காடி, நமக்குள்ள உரிமையை நிலை-நாட்டிட வேண்டிய அவசியம் இருப்பதால், அதனைச் சரியான வகையில் முறைப்படி, கழகம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்-கொள்ளும் என்று கூடியிருந்த கழகத் தோழர்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அதனை ஏற்றுக் கொண்டு, கழகத் தோழர்கள் விடைபெற்றுச் சென்றனர். 5. பெரியார் திடலில் நிகழ்ந்த பெண்ணடிமைத் தளையாம் தாலியகற்றும் நிகழ்ச்சி விவரம் என்ன?
பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றிக் கொள்கிறோம். தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை வாழ்வே எங்கள் சுகவாழ்வு என்று கூறி 21 இணையர் தாங்களாகவே முன்வந்து தாலியை அகற்றிக் கொண்டனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் இந்தப் புரட்சிகரமான நிகழ்ச்சி நடந்தேறியது.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி ஏப்ரல் 14 அன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை பெண்களின் அடிமைச் சின்னமாம் தாலியகற்றும் விழா சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஏன் தாலி அகற்றம்? தன்னிலை விளக்கம்
பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொள்ள முன்வந்த இணையர்கள் (துணைவர், துணைவியர்கள்) தாலியை அகற்றிக் கொள்வது ஏன் என்று அவர்களாகவே முன்வந்து கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
பெண்களுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக அணிவதுதான் தாலி என்றால், ஆணுக்குத் திருமணம் ஆகி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?
ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்பதுபற்றி அடுத்தவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே கூட கெட்ட புத்தி தானே? - அடுத்தவர் உரிமையில் தலையிடுவதுதானே?
ஒருவர்மீது மற்றவரின் நம்பிக்கை
நான் அவரை மதிக்கிறேன்; -நம்புகிறேன் - _ அவர் என்னை மதிக்கிறார், நம்புகிறார். இது தானே வாழ்விணையர் என்பது - -_ தோழமை என்பது; தாலி என்று ஒன்று கட்டுவது நம்பகத் தன்மையில்லாதது தானே?
இணையர்கள் தத்தம் கருத்துக்களைச் சரமாரியாகப் பொழிந்து தள்ளினர். தந்தை பெரியார் கொள்கை வழியே சிறந்தது - திராவிடர் கழகம் சரியான பாசறை. எங்கள் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கிறது, சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு; மற்றவர்களும் எங்களை மதிக்கிறார்கள் மற்றவர்களும் எங்களைப் பின்பற்றுங்கள் என்று பூரிப்போடு உணர்ச்சிகரமாகக் கூறினார்கள்.
தமது துணைவர் வர இயலாத நிலையில் அவரின் ஒப்புதலோடும் மனம் மகிழ்ந்து இந்த அடிமைச் சின்னத்தை அகற்றிக் கொள்கிறேன் என்று நான்கு பெண்கள் கூறினார்கள்.
இணையர் வராத நிலையிலும்
தனது இணையர் வர இயலாத சூழ்நிலையில் அவராகவே முன்வந்து கழற்றிக் கொடுத்த தாலி இதோ என்று ஒப்படைத்தார் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன்.
21 இணையர்
21 இணையர்கள் அடிமைத்தளையை அகற்றிக் கொண்டனர். ஒவ்வொரு அகற்றலின்போதும். அவர்கள் தெரிவித்த சாட்டையடி கருத்துக்களின் போதும் விண்மூட்டும் முழக்கங்களும், கரஒலிகளும் மன்றத்தையே கிடுகிடுக்க வைத்தன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், தஞ்சை கலைச்செல்வி, (மாநில மகளிர் அணி செயலாளர்), க. பார்வதி (தலைமை செயற்குழு உறுப்பினர்), திருமகள் (தலைமை செயற்குழு உறுப்பினர்), உமா செல்வராஜ் (மண்டல மகளிரணி செயலாளர்), வழக்குரைஞர் (தெ. வீரமர்த்தினி, கு. தங்கமணி, கனகா, க. வனிதா, சுமதி முன்னிலையிலும் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சிகரமான நிகழ்ச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் எழுச்சியுடன் நடைபெற்றது. கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அறிமுகவுரையுடன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்புச் செய்தார். நிகழ்ச்சியின் அவசியத்தைத் தமிழர் தலைவர் தொடக்கத்தில் விளக்கினார்.
அடிமைத்தளையாம் தாலியை அகற்றிக் கொண்டோர்
வடசென்னை மாவட்டம்: பா. நிர்மலா (தி.மு.க.). _ பாலன், எஸ். விமலாதேவி _ வாசு, இரமணி _- பாஸ்கரன்,
தென் சென்னை மாவட்டம்: நிர்மலா -_ பாலமுரளி
ஆவடி மாவட்டம்: கீதா _ ராமதுரை, வனிதா _ -கார்வேந்தன், ராணி -_ ரகுபதி, சங்கரி - குமார் கிருஷ்ணகிரி மாவட்டம்: கண்மணி -_ வனவேந்தன், சு. வசந்தி _- பொன். விசுவநாதன், எஸ்.பிரியா _ -ஜெயரட்சகன், சவுந்தரி _ -இராதா கிருட்டிணன் (கணவர் வர இயலாத நிலையில் அவருடைய ஒப்புதலோடு தாலி அகற்றிக் கொண்டவர்.)
தருமபுரி மாவட்டம்: சங்கீதா _ கிருட்டிண மூர்த்தி (அகற்றிய தாலியை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக அளித்தார்).
என். சகுந்தலா (தான் வர இயலாத நிலையில் தனது துணைவர் புலவர் வேட்ராயன் அவர்களிடம் தாலியை கொடுத்து அனுப்பியவர்)
தஞ்சை மாவட்டம்: மு. ஜெயலட்சுமி _ முருகேசன், பாக்கியம் _ ஏகாம்பரம் (கன்னடத்தில் பேசினார்), சி. ஈஸ்வரி _ சிவா, முருகம்மாள் _ முருகேசன்.
கோபி மாவட்டம்: ஆர். சுமா _- சிவக்குமார் (மலையாளத்தை தாய் மொழியாக கொண்டவர் _ மலையாளத்திலேயே பேசினார்).
திருத்துறைப்பூண்டி மாவட்டம்: கலைவாணி -_ சித்தார்த்தன்.
நாகை மாவட்டம்: கமலா _- நடராஜன்.
நாகை மாவட்டம்: கமலா _- நடராஜன்.
21 இணையர் தாலியை அகற்றிக் கொள்ளும் புரட்சியை நடத்திக் காட்டிப் பெரும் புகழ் பெற்றனர்.
6. இந்துத்துவாவாதிகளின் வன்முறை _ காவல்துறையின் செயல்பாடு _ திராவிடர் கழகத் தோழர்கள் கைது பற்றிய விவரம் என்ன?
தாலி அகற்றும் நிகழ்ச்சி எல்லாம் முடிந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் சிவசேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் பெரியார் திடலை முற்றுகையிட இருப்பதாக பெரியார் திடலின் வெளியில் இருந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த நிலையில், சிவசேனாவைச் சேர்ந்தவர்களை பெரியார் திடல் நுழைவு வாயில்வரை வர எப்படி அனுமதித்தனர் என்பது அதிர்ச்சிக்குரியது _- ஆச்சரிய-மானதும்கூட!
வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் திடல் வாயில்முன் கேட்ட சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த நிலையில், காவல் துறையினர், முற்றுகையிட வந்த சிவசேனாவினரைத் தடுக்காமல், கருப்புச் சட்டை அணிந்திருந்தவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியது எந்த வகையில் சரியானது?
திராவிடர் கழகம் என்றால் கட்டுப்-பாட்டுக்குப் பெயர் போனது _- வன்முறைக்கு அப்பாற்பட்டது என்பது வேறு எந்தத் துறையையும்விட, காவல் துறைக்கு அதிகமாகவே தெரியுமே! தெரிந்திருந்தும் கருப்புச் சட்டைக்காரர்களைத் தாக்கலாமா?
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.குணசேகரன், தஞ்சை இளவரசன், பெரியார் திடல் சுரேஷ் மற்றும் பழனி தோழர்கள் அழகர்சாமி, பெரியார் இரணியன் ஆகிய தோழர்கள் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; 108 வாகனம் வரவழைக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மண்டையில், கைகளில் அடிபட்ட காரணத்தால், பல தையல்கள் போடப்பட நேர்ந்தன.
பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், சிவசேனாகாரர்கள் பெரியார் திடலை முற்றுகையிட வந்ததை அனுமதித்ததையும், (அவர்கள் வருவது காவல் துறைக்கு முன்னதாகவே தெரியும்) தடுக்க முனைந்த திராவிடர் கழகத் தோழர்களைத் தாக்கியதையும் வைத்துப் பார்க்கும்பொழுது _ நிச்சயம் ஒரு சந்தேகந்தான் ஏற்படுகிறது.
பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி விருந்தும் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டதற்கு வலு சேர்க்கும் முறையில், காவல் துறையின் உதவியோடு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு இருக்கக்கூடும் என்று முடிவு செய்ய சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளன. காவல்துறை நடந்து கொண்ட விதம் இத்தகைய அய்யப்பாட்டை ஏற்படுத்துகிறது.
தாங்கள் விதித்த தடையை உடைத்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிடர் கழகத்தினர் வெற்றிகரமாக நடத்திவிட்டனரே என்ற ஆத்திரம் _-கோபம் காவல்துறைக்கும், மேலிடத்திற்கும் இருந்திருக்கக்கூடும் என்ற அய்யப்பாட்டை காவல்துறையின் நடவடிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.
தாங்கள் விதித்த தடையை உடைத்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிடர் கழகத்தினர் வெற்றிகரமாக நடத்திவிட்டனரே என்ற ஆத்திரம் _-கோபம் காவல்துறைக்கும், மேலிடத்திற்கும் இருந்திருக்கக்கூடும் என்ற அய்யப்பாட்டை காவல்துறையின் நடவடிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், வெளியூரிலிருந்து பெரியார் திடல் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, 14.4.2015 இரவு ஊருக்குச் செல்லுவதற்குப் பெரியார் திடலிலிருந்து வெளியில் சென்ற தோழர்களை தினத்தந்தி அலுவலகம் பக்கத்தில் காவல்துறையினர் கைது செய்து, இரவு முழுவதும் போலீஸ் ஜீப்பில் அலைக்கழித்து, 15.4.2015 காலை மாஜிஸ்ட்ரேட்முன் நிறுத்தி, 15 நாள்கள் சிறையில் வைப்பதற்கான ஆணையைப் பெற்றனர்.
போலீஸ் தடியடியால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோழர்களுக்கு உதவியாக இருந்த - சென்னை பெரியார் திடலில் பணியாற்றும் திரு.கே.கலைமணியை, மருத்துவமனை வளாகத்திலேயே கைது செய்தனர். ஒன்பது கழகத் தோழர்களையும் புழல் சிறைக்கு அழைத்துச் சென்று, திடீர் யோசனைக்குப்பின், அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
147, 148, 341, 294(b), 323, 324, 506(ii) அய்.பி.சி. பிரிவுகளில் கழகத் தோழர்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளிலும் வழக்கு ஜோடிக்கப்பட்டது.
தோழர்கள் கலைமணி, சவுந்தரராசன், வினோத், ராஜேஷ், ரவி, மகேந்திரன், திராவிடமணி, வனவேந்தன், அய்யப்பன் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டு அடைக்கப்பட்டனர். அதன்பிறகு மேலும் ஆறு கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்தும் நடந்தால், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொன்னவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடிதம் மூலம் கழகத்தின் துணைத் தலைவரால் காவல்துறை ஆணையருக்குத் தெரிவிக்கப்பட்டும் இருந்தது (29.3.2015).
ஆனால், அந்தப் புகார்மீது எந்தவித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திரு.இராமகோபாலன், 14.4.2015 அன்று பெரியார் திடலில் தி.க. நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் ஒன்று செய்யப் போகிறோம்; அதனை, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று இப்பொழுது சொல்ல மாட்டேன்; ஒன்று நடக்கும்; இப்பொழுது சொன்னால், போலீசார் என்னைப் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்று சொன்னாரே, அதனைத் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 11.4.2015 நாளிட்ட விடுதலை அறிக்கையிலும் குறிப்பிட்டு இருந்தாரே, அதன் அடிப்படையில் திரு.இராமகோபாலன்மீது இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
இராமகோபாலன் சொன்னபடிதானே நடந்துள்ளது _- சிவசேனா குண்டர்களிட-மிருந்து நான்கு வெடிகுண்டுகள், கடப்பாரை, சுத்தியல் போன்ற ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனரே! ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாம் புகார் கொடுத்தால் அதன்மீது காவல்துறையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அதேநேரத்தில், இந்துத்துவாவாதிகள் புகார் கொடுத்தால், அதனைக் கண்களில் ஒத்திக்-கொண்டு சட்டப்படியாக நாம் நடத்தும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கின்றனர் என்றால், இதன் நிலையை நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுதான் தமிழக அரசின் செயல்பாடா என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
60 சதவிகிதத்தினர் தாலி நீக்கத்துக்கு ஆதரவு
தந்தை பெரியார் அவர்களின் அழுத்தமான கொள்கையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத கட்சிகள் இருக்கக்கூடும்; அதே நேரத்தில், தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மாற்றத்திற்கான புரட்சிக் கொள்கைகளை மக்கள் தெளிவாக அறிந்தே வைத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 14.4.2015 நடைபெற்ற தாலி அகற்றல் பற்றிய விவாதத்தையொட்டித் தெரிவிக்கப்பட்ட கருத்தில், 60 சதவிகிதத்தினர் தாலியகற்றல் நிகழ்ச்சிக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர்.
11 சதவிகிதத்தினர் கருத்துரிமைக்கு ஆதரவாகக் கருத்தும் கூறியுள்ளனர். ஆக, 71 சதவிகிதத்தினர் நமக்கு ஆதரவு. இவற்றைத் தெரிந்துகொண்ட பிறகாவது உண்மை நிலையை உணர வேண்டாமா?
புகார் கொடுத்தால் தடையா?
புகார் கொடுத்தால் தடையா?
இந்தப் பிரச்சினையில் இன்னொன்று மிகமிக முக்கியமானது.
ஓர் இயக்கம் அல்லது ஓர் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியைத் தடை செய்யச் சொல்லி, அந்த இயக்கத்துக்கும், அமைப்புக்கும் எதிரான _- விரோதமான கொள்கையுடைய அமைப்புகளோ, தனி மனிதர்களோ காவல்துறையில் புகார் கொடுத்தால், அதனை ஏற்றுக்கொண்டு எந்த நிகழ்ச்சியையும் தடை செய்துவிடலாம் என்ற ஓர் எண்ணம் ஏற்படுவதற்குக் காவல்துறை துணை போகுமானால், நாட்டில் எந்த ஓர் இயக்கமும், அமைப்பும், கட்சியும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவே முடியாது.
தங்களுக்குப் பிடிக்காத கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது; நடத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று புகார் கொடுக்க ஒவ்வொரு அமைப்புகளும் முயன்றால், மிரட்டினால் அதன் விளைவு என்னாகும் என்று காவல்துறை நினைக்க வேண்டாமா?
ஒரு தவறான முன்னுதாரணத்தைக் காவல்துறையே ஏற்படுத்தலாமா?
காவல்துறையின் கடமை என்ன?
கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும், எழுத்துரிமைக்கும், பிரச்சார உரிமைக்கும் ஆதரவாக நின்று, அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதுதான் காவல்துறையின் வேலையே தவிர, எதிர்ப்பவர்கள் பக்கம் நின்று அடிப்படை உரிமைகளுக்குத் தடையை ஏற்படுத்துவது ஜனநாயக முறைக்கு உகந்ததல்ல _- அது பாசிசத்துக்குத் துணைபோவதாகும்.
வேலூர் சிறையிலிருந்த கழகத் தோழர்கள் க.கலைமணி, கி.சவுந்தரராசன், ச.வினோத், ப.ராஜேஷ், செ.இரவி, ச.மகேந்திரன், ஆ.அய்யப்பன், கு.செல்வேந்திரன், மங்களபுரம் பாஸ்கரன், கோ.சிவ வீரபத்திரன், பொன்.பாலா, ப.வேல்முருகன், த.சீ.இளந்திரையன் ஆகியோரின் பிணை மீதான விசாரணை சென்னை எழும்பூர் 14ஆவது சென்னை மாநகர குற்றவியல் நடுவர் நீதிபதி கயல்விழி முன்னிலையில் நடந்தது. கழகத் தோழர்கள் சார்பாக வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், இரத்தினகுமார், சு.குமாரதேவன், தெ.வீரமர்த்தினி, ந.விவேகானந்தன், மு.சென்னியப்பன், ம.வீ.அருள்மொழி, ஜெ.துரைசாமி, இளையராஜா ஆகியோர் ஆஜரானார்கள். வழக்குரைஞர்களின் வாதங்களை ஏற்று கழகத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் இருநபர் உத்தரவாதத்தோடு பிணை வழங்கப்பட்டது (17.4.2015). அன்று மாலையே தோழர்கள் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
15 நாட்களுக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் நாள்தோறும் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்-பட்டது.
வன்முறையாளர்கள் மீதான வழக்கு பிரிவுகள்
பெரியார் திடலில் நாட்டுக் குண்டுகளுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சிவசேனாகாரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகள்.
147, 148, 341, 294(B), 324, 506(11) IPC & 3 of Explosive Substance act 1988.
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் இராதாகிருஷ்ணன், கே.லோகநாதன், பி.கர்ணன், ஜே.ஏழுமலை, கே.சுரேஷ், ஆர்.இராமன், வி.முருகேசன், வி.பிரேம்குமார், அய.வேணுகோபால், கே.கார்த்திகேயன், சி.முருகன் ஆகியோர் ஆவர்.
இதுவரை இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. பிணை மறுக்கப்பட்டது.
7. திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து என்ன?
தாலியை அகற்றிக் கொள்ள தாமே முன்வரும் தாய்மார்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதில் மாட்டுக்கறி உண்ணும் உரிமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என்பதற்கான அடையாளமாக அமைதியான விருந்து _- அதுவும் கட்டணம் தந்து விரும்பிச் சாப்பிடுவோர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகவும்தான் அது நடைபெறும் என்றும் காவல்துறைக்கு எழுதப்பட்ட நமது பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தனி மதச் சுதந்திரம் அதுவும் பொது அமைதிக்குச் சிறிதும் பங்கம் இல்லாமல், ஒரு அரங்கத்திற்குள், ஒத்தக் கருத்துள்ளவர்கள் கூடி நடத்திடும் நிகழ்ச்சியைத் தடுப்பது அப்பட்டமான மனித உரிமை, அடிப்படை உரிமைப் பறிப்பு ஆகும்.
தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை, திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களானாலும் சரி, வேறு எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி, பொது அமைதிக்குக் கேடு, பொதுச் சொத்துக்கு நாசம், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஏதாவது ஒரு சிறு சம்பவத்தைக் கூடக் சுட்டிக் காட்ட முடியாது.
ஏதாவது நிகழ்ந்திருந்தால் அது மற்ற விஷமிகளால், எதிர்ப்பாளர்களால்தான் நிகழ்ந்திருக்கலாமே தவிர, நம்மால் ஏற்பட்டது இல்லை என்பது காவல்துறை அதிகாரிகளுக்கே தெரியும்.
ஏதாவது நிகழ்ந்திருந்தால் அது மற்ற விஷமிகளால், எதிர்ப்பாளர்களால்தான் நிகழ்ந்திருக்கலாமே தவிர, நம்மால் ஏற்பட்டது இல்லை என்பது காவல்துறை அதிகாரிகளுக்கே தெரியும்.
அனுமதியின்றி எந்தத் திடீர் போராட்டத்தையும்கூட இதுவரை செய்திடாத _- சட்டம், ஒழுங்கை, மதிக்கின்ற ஓர் இயக்கம் பெரியார் கண்ட திராவிடர் கழகம் என்ற நம் அமைப்பு!
இதன்மீது வீண் பழி சுமத்துவதன்மூலம் மதவெறிக் கும்பலுக்கும், மனித உரிமைப் பறிப்பாளர்களுக்கும், காலிகளுக்கும், கூலிகளுக்கும் துணை போகலாமா காவல்துறை?
அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன கூறுகிறது?
மேலும் அரசியல் சட்ட விதி 51A(h)) படியான அடிப்படைக் கடமைகளில், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் (Scientific Temper) எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டல் (Spirit of Inquiry) சீர்திருத்தம், மனிதநேயம்(Reform and Humanism) (ஒருவரை மற்றொருவர் அடிமையாகக் கருதுவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது) அடிப்படையில் அமைந்த பரப்புரைப் பிரச்சாரமே எங்கள் செயலாகும். இந்நிலையில் யாருடைய மத உணர்வுகளையும் காயப்படுத்துதல் அல்ல.
சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967இல் நிறைவேற்றப்பட்டதில் தாலி என்பதை அணிந்துதான் திருமணம் நடத்த வேண்டுமென்பது கட்டாயமோ, தேவையோ அல்ல என்று சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் 48 ஆண்டுகள் அமலில் இருந்து வருகிறது!
தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் பல ஊர்களில், பல மேடைகளில், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் தாலியை அகற்றிக் கொண்ட நிகழ்ச்சி, பெரியார் திரைப்படத்தில் காட்டப்பட்டு, சென்சார் போர்டால் அனுமதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததோடு, 100 நாள் ஓடிய படம் மத்திய அரசின் விருதும் பெற்ற திரைப்படமாக, அது வெற்றிகரமாக எவ்வித மறுப்பும் இன்றி பரவியுள்ளது. எவரும் மனம் புண்பட்டதென்று அக்காட்சிக்காக புகார் கொடுத்ததில்லையே! எனவே 80 ஆண்டு காலமாக நடைபெறுவது இது!
சட்டப்படியான நீதித் துறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இப்படி எத்தனையோ வாதங்கள் உண்டு. இன்று சட்டப்படி சென்னை உயர் நீதிமன்றத்தைக் கழகம் நாடி, நீதித் துறைமூலம் இதற்குச் சட்டப் பரிகாரம் தீர்வு காண எல்லா ஏற்பாடுகளும் திராவிடர் கழகத்தால் செய்யப்பட்டுள்ளன.
அங்கு உரிய நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். ஏனெனில் இதில் அடங்கியுள்ளவை _- சட்டப் பிரச்சினை _- ஆழ்ந்த மனித உரிமை, தனி மனித கருத்துச் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை போன்றவை ஆகும்.
எனவே, அதன் மூலம் தீர்வைக் காண்பதே சாலச் சிறந்தது அதுவே நிரந்தரத் தீர்வாக இப்பிரச்சினைக்கு அமையும் _ அமைய வேண்டும் என்பதால் முடிவை எதிர்நோக்கிக் காத்திருப்போம்.
--------------
பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயதுக் குழந்தையின் திருமணத்தை பன்வாரி தடுத்து நிறுத்தினார். அந்த ஆசாமியோ அந்தப் பகுதியில் பிரபலமானவர், விளைவு, பன்வாரி தன் கணவரின் எதிரிலேயே கொடுரமான முறையில் அய்ந்து கொடியவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். (1992 செப்டம்பர்). பி.ஜே.பி. ஆட்சி இதனைக் கண்டுகொள்ளவேயில்லை. கடும் எதிர்ப்புக் கிளர்ந்து எழுந்த பிறகே அய்ந்து மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய்யப்-பட்டனர். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பன்வாரி கிராமத்திலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதோ 1994 அக்டோபரில். டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சொன்னது என்ன தெரியுமா? பான்வாரியை உயர்ஜாதி பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? என்பதுதான் அந்தக் கேள்வி. வழக்கு தள்ளுபடியும் செய்யப்-பட்டது. (Economic Political Weekly 25.11.1995)
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (10.1.1996)
--------------
கலாச்சாரக் காவலர்களே! இந்த நிலை தொடர வேண்டுமா?
மேயோ கூற்று:
மேயோ கூற்று:
புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்றபின் கல்வி கற்பிப்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாருமில்லை.
ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளுகிறாள். புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண்ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவருக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று
- இப்படி எழுதியிருப்பது மேயோ என்ற அமெரிக்க மாது.
நூல்: மதர் இந்தியா
--------------
வன்முறைக் களமாக்கும் முயற்சி
திராவிடர் கழகத்தின் சார்பில் தற்போது அறிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்குக்கூட, யாரையும் அவர்கள் கட்டாயப் படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிகழ்ச்சி 14-_4_-2015 அன்று காலை 10 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 7 மணி அளவிலேயே மிக எளிமையாக நடத்தி முடித்து விட்டார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களும் மற்றும் சிவசேனா கட்சியினரும் திட்டமிட்டு, அத்துமீறி பெரி யார் திடலுக்கு உள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டங்களில் இறங்கி தடியடி நடத்தியிருக்கிறார்கள். காவல் துறை அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக் கிறது. இன்னும் சொல்லப் போனால், காவல் துறையினரே அவர்களைத் தூண்டிவிட்டு, பெரியார் திடலுக்குள் இருந்தவர்களைத் தாக்கச் செய்திருக்கிறார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு சம்பவம் நடைபெற் றிருக்கிறது.
அண்மைக் காலத்தில் இந்துத்துவா மற்றும் சிவசேனா கட்சியினர் தமிழகத்தில் தொடர்ந்து விரும்பத்தகாத செயல்களில் இறங்கி, தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசின் கண் ஜாடைக்காகக் காத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியினரும் இவர்களின் வன்முறைச் செயல்களைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். மேலும் பெரியார் திடல் வரை வந்து கலகம் விளைவித்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பெரியார் திடலிலிருந்து வெளியே வந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் களையே பத்து பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையினரின் இந்த அக்கிரமச் செயலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
- முத்தமிழறிஞர் கலைஞர், தி.மு.க. தலைவர்
--------------
மதவெறி எதிர்ப்பு இயக்கம் நடத்துவோம்
பெரியார் திடலுக்குள் நுழைந்து மதவெறி கும்பல் தாக்குதல் நடத்த முயன்ற நிகழ்வு மிகவும் கவலை அளிக்கின்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ, மதவெறி சக்திகளுக்கு எதிராக, கூர்மையான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகத் தோழர்களை உடனடியாகத் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். திராவிடர் கழக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா மதவெறி அமைப்புகளைச் சார்ந்தோரைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், இனியும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
--------------
மதச்சார்பற்ற சக்திகளுக்குச் சவால்
ஒருவர் தாலியை அணி வதும், அதை அகற்றிக் கொள்வதும் அவரவர் தனிமனித விருப்பமும், உரிமையுமாகும். இக்கருத்தை ஆதரித்து பரப்புரை செய்ய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பெரியார் திடல் வளா கத்திற்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல் துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்த மண்ணில் வகுப்புவாதப் பிற்போக்குச் சக்திகள் வேரூன்றி தலைதூக்க முயற்சிப்பதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இச்செயல்கள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.
எனவே தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிற வகுப்புவாத பாசிசப் பிற்போக்குச் சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
- காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
--------------
மேலாடையை அகற்றியவர்கள் கருப்புச் சட்டையை அகற்றுவார்களாம்
கருப்புடையை அகற்றுவோம் என்று சொல்லும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ் ஜாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற கொடுமை இருந்ததே!
கிருத்தவன் வெள்ளைக்காரன் ஆட்சியில் சீர்திருத்தவாதிகளின் முயற்சியில் அந்தக் கொடுமை நீங்கியது.
மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் இதற்கு அளிக்கப் போகும் பதில் என்ன?
* * *
தாலி பார்த்துதான் நடந்ததா?
தேசிய ஆவணக் கழகத்தின் அறிக்கையின்படி குடும்பத்தவர்களால் பொருந்தாத பாலியல் வன்முறைகள் 36.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 392 வழக்குகள் என்றால் 2013ஆம் ஆண்டில் 536 வழக்குகள். இந்த 536இல் 108 வழக்குகள் 20.1 சதவீதம் மகாராட்டிரத்தில் பதிவாகியுள்ளது. அதில் 117 வழக்குகள் ரத்த உறவு உள்ளவர்-களாலே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. தாலி பார்த்துதான் இவ்வன்மம் எல்லாம் நடந்ததா?
* * *
கோவிலில் கல்யாணம் - பெரியார் திடலில் தாலியகற்றம்
* * *
கோவிலில் கல்யாணம் - பெரியார் திடலில் தாலியகற்றம்
வடபழனி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைதிக முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் எஸ்.வாச _ விமலாதேவி ஆகியோர் நாள் 14.11.1997.
பிற்காலத்தில் தந்தை பெரியார் கொள்கையைப் புரிந்துகொண்டு ஏற்று திராவிடர் கழகத்திலும் இணைந்து 14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் அம்பேத்கர் பிறந்த நாளில் நடைபெற்ற தாலியகற்றும் நிகழ்ச்சியில் பங்குகொண்டு, தனது நிலைப்பாட்டை விவரித்து தாலியை உணர்வுப்பூர்வமாக அகற்றிக் கொண்டனர்.
--------------
சிவப்பு விளக்குப் பெண்களா?
திராவிடர் கழகத்தில் உள்ள குடும்பத்தினர் யாருடைய வற்புறுத்தலோ, அச்சுறுத்தலோ எதுவுமின்றி தாங்களே முன்வந்து தங்களுக்குத் தாங்களே தாலியை அகற்றிக் கொண்டனர். ஆனால், தாலியை அகற்றிக் கொண்ட பெண்களை, சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று கொச்சைப்படுத்தும் வகையில் தமது ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
அவருடைய அநாகரிகமான இந்தப் போக்கையும், இத்தகைய மதவாத சக்தி களோடு கைகோர்த்துக் கொண்டு திராவிடர் கழகத்தினர்மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கையும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
- எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
--------------
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது
தாலி அணிவதும் -_ அகற்றுவதும், தாலி அணி யாமல் இருப்பதும் தனிநபர் விருப்பம் சார்ந்ததாகும். அதுபோல் கருத்துகளை வெளிப்படுத்தும், பரப்பும் சுதந்திரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவற்றைக்கருத்தில் கொள்ளாமல் தமிழக காவல்துறை இந்நிகழ்வுக்கு தடை விதித்தது தனிநபர் உரிமைக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும். எனவே கருத்துரிமை - மாற்றுக் கருத்துக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து-விடுகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் செயல்களுக்கு துணைபோகாமல் மதவெறி சக்திகளின் வன்முறைச் செயல்களை தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும்; அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் உரிமை, கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை தமிழகத்தில் நிலைநிறுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
--------------
பண்பாட்டு வளர்ச்சியைப் பின்னுக்கு இழுப்பதா?
திராவிடர் கழகத்தின் கருத்துப் பிரச்சார இயக்கத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது, தமிழகத்தின் முற்போக்குப் பாரம்பரியம் மீது தொடுக் கப்பட்ட தாக்குதலாகும். பகுத்தறிவுக் கருத்துகள் செழித்த தமிழக மண்ணில் இன்று மதவெறிச் சக்திகள் மாற்றுக் கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுவதும்,
அதற்கு சாதகமான முறையில் அரசு செயல்படுவதும், மாநிலத்தின் பண்பாட்டு வளர்ச்சியைப் பின்னுக்கு இழுப்பதாகி-விடும் என்று சுட்டிக்காட்டப்-பட்டுள்ளது. அரசு, தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும், அனைத்துக்-கலைஞர்களும், இலக்கியவாதிகளும் இதற்காகக் குரல் கொடுக்கவேண்டும்.
அதற்கு சாதகமான முறையில் அரசு செயல்படுவதும், மாநிலத்தின் பண்பாட்டு வளர்ச்சியைப் பின்னுக்கு இழுப்பதாகி-விடும் என்று சுட்டிக்காட்டப்-பட்டுள்ளது. அரசு, தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும், அனைத்துக்-கலைஞர்களும், இலக்கியவாதிகளும் இதற்காகக் குரல் கொடுக்கவேண்டும்.
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
--------------
பிற்போக்குக் கருத்துகளைத் திணிக்கும் முயற்சி
சிவசேனா அமைப்பினர் பெரியார் திடல் முன்பாகக் கூடி வன்முறைத் தாக்கு தலில் ஈடுபட்டனர். காவல்துறையோ, தானும் சேர்ந்துகொண்டு திராவிடர் கழகத் தொண்டர்களைத் தாக்கியிருக்கிறது.
அரசின் இந்தப் போக்கு, பகுத்தறிவுச் சிந்தனைகள் தழைத்த தமிழக மண்ணில் பிற்போக்குக் கருத்துகளைப் புகுத்த முனை வோரின் கட்டற்ற சுதந்திரத்திற்கே வழி வகுக்கும் என்பதை சரிநிகர் இயக்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.
- சரிநிகர் அமைப்பு
--------------
தனிநபரின் விருப்பம்
தினந்தோறும் தாலி கட்டிக்கொள்ளும் திரு மணங்கள் நடைபெறுகின்றன. அவற்றை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்த-வில்லை. தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் விதத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
தாலி கட்டுவதும், மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். தாலி கட்டிக்கொள்ளலாமா? கூடாதா? என்ப-தும் தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்டது.
- திரைப்பட நடிகை குஷ்பு, காங்கிரஸ்
--------------
எதிரிகள் செய்த விளம்பரங்கள்
இதற்கிடையில், இந்த இரு அறிவிப்புகளையும் நாம் நிகழ்ச்சியை நடத்தும் முன்பே ஏராளமாக விளம்பரம், விவாதங்கள், எதிர் அறிக்கைகள் என்பவை மூலம் இப்பிரச்சினை விவாதமாக்கி நமக்கு முதல் கட்ட வெற்றியைத் தேடித் தந்துள்ள நமது இன எதிரிகளுக்கும், அவர்களது ஏவுகணை களுக்கும், நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இதற்கிடையில், இந்த இரு அறிவிப்புகளையும் நாம் நிகழ்ச்சியை நடத்தும் முன்பே ஏராளமாக விளம்பரம், விவாதங்கள், எதிர் அறிக்கைகள் என்பவை மூலம் இப்பிரச்சினை விவாதமாக்கி நமக்கு முதல் கட்ட வெற்றியைத் தேடித் தந்துள்ள நமது இன எதிரிகளுக்கும், அவர்களது ஏவுகணை களுக்கும், நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
இறுதியில் சிரிப்பவனே புத்திசாலி என்பதை நம் இயக்கம் உலகுக்குக் காட்டும் என்பது உறுதி என்று ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்ட விடுதலை அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
உண்மை,1.5.15
வேலூர் ஏப்.18_ சென்னை பெரியார் திட லில் நடைபெற்ற தாலி யகற்றும் நிகழ்ச்சி நிறை வடைந்த நிலையில், இந்துத்துவாவாதிகள் அத்துமீறி சென்னை பெரி யார் திடலில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட வர்களைத் தடுத்த கழகத் தோழர்கள் கைது செய் யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட் டனர். நேற்று மாலை அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விவரம் வருமாறு:
விவரம் வருமாறு:
ஏப்ரல் 14 அன்று திரா விடர் கழகம் நடத்த விருந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச் சியைக் காவல்துறை ரத்து செய்த ஆணை உயர்நீதி மன்ற தனி நீதிபதியால் தடை செய்யப்பட்டு 14ஆம் தேதியன்று காலை தாலி அகற்றிக் கொள் ளும் நிகழ்ச்சி நடைபெற் றது. பின்பு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு - _ முதல் நாள் தனி நீதிபதி பிறப் பித்த உத்தரவுக்குத் தடை விதித்த செய்தி கிடைத்த வுடன், மேற் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படா மல் அவரவர் தங்களது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர் என்பதைத் தெரிந்து கொண்ட இந்துமத வெறியர்கள், போலீசாரின் தடை உத்தரவு அமலில் இருக் கும் ஈ.வெ.கி. சம்பத் சாலையில் ஒரு ஆட் டோவில் உருட்டுக் கட் டைகள், கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றோடு பெரியார் திடலுக்குள் வெறித்தன மாக கூச்சலிட்டவாறு உள்ளே நுழைந்தனர். அதற்கு முன்பு காவல் துறையினர் அவர்களைத் தடுக்காமல் கழக அலுவலகத்திற்கு மேற்படி நபர்கள் வருகிறார்கள். ஷட்டரை சாத்திக் கொண்டு உள்ளே இருங்கள் என்று பேசினார்கள். திடீரென்று உள்ளே நுழைந்தவர் களை சொற்பமாக இருந்த கழகத் தோழர்கள் அவர்களை வெளியேற் றும் முயற்சியில் ஈடுபட் டனர் அத்துமீறி பெரியார் திடலுக்குள் நுழைந்தவர் கள்மீது நடவடிக்கை எடுக்காமல் கழகத் தோழர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினார்கள் அதில் கழகத் தோழர்கள் அய்ந்து பேர் காய மடைந்தனர். பெரியார் திடலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயன்ற இந்து மத அமைப்பினர்மீது குற்ற எண் 647/2015 என்ற வழக்கினை பதிவு செய்த காவல்துறையினர் நமது கழகத் தோழர்கள்மீது பிணையில் வர முடியாத பிரிவின்கீழ் குற்ற எண் 648/2015 என்ற வழக்கைப் பதிவு செய்தனர். இதற் கிடையில் போலீசாரின் வெறித்தனமான தாக்கு தலில் காயமடைந்த தோழர்கள் சுரேஷ், இளவரசன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ்மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட் டனர்.
மருத்துவமனை வளாகத்திலும் கைது!
மேற்படி தோழர்களுக்கு உணவு வாங்கித் தருதல் மற்றும் அவசர தேவைக்காக உதவி செய்து கொண்டிருந்த தோழர் கலைமணியை அரசு பொது மருத்துவ மனைக்குள் மேற்படி இந்து மத வெறியர்கள் அளித்த புகாரின் பேரில் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய் தனர். அதற்குப் பின்பு வழக் கிற்கு சம்பந்தமில்லாத 14 கழகத் தோழர்களை போலீசார் பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்தபோதும் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டி ருந்தபோதும், இரயில் நிலையம் சென்றவர்களை யும் கைது செய்து தங்கள் காவலில் வைத்திருந்தனர்.
பின்பு அவர்களில் 9 பேரை இரவோடு இர வாக கைது செய்து அதி காலை 4 மணிக்கு மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
சிறையில் இருந்து வெளி வந்தவர்கள் சார்பாக நன்றி தெரிவித்து தமிழர் தலைவருக்கு பயனாடை. (18.4.2015)
வேலூர் சிறையில் அடைப்பு
இதற்கிடையில் மேற்படி தோழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து யாருக்கும் எந்த தகவலும் போலீசார் தெரிவிக்க வில்லை. 7 மணிக்கு மீண்டும் மேஜிஸ்ட்ரேட் முன்பு நேர் நிறுத்தப் பட்ட தோழர்கள் புழல் சிறைக்கு காவலுக்குக் கொண்டு செல்லப்பட் டனர். புழல் சிறையில் அவர்களை அடைப்பதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கழக வழக்குரைஞர்கள்
9 தோழர்கள் சார்பாக பிணை மனுவினை கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், வழக்குரை ஞர்கள் இர. இரத்தின குமார், சு. குமாரதேவன், ஜே. துரைசாமி, தெ. வீர மர்த்தினி, ந. விவேகானந் தன், ம.வீ. அருள்மொழி, மு. சென்னியப்பன், ஆகி யோர் தாக்கல் செய்தனர்.
மீண்டும் 16.04.2015 அன்று ஆறு கழகத் தோழர்களை மேற்படி வழக்கிற்காக போலீஸ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தது. மேற்படி இரண்டு பகுதியாக கைது
செய்யப்பட்ட தோழர்களின் பிணை (ஜாமீன்) விசாரணை நேற்று மாலை 14ஆவது சென்னை மாநகர குற்றவியல் நடுவர் திருமதி கயல்விழி முன்னி லையில் விசாரணைக்கு வந்தது.
வழக்குரைஞர் த. வீரசேகரன், இரத்தினகுமார், சு. குமாரதேவன். வீரமர்த்தினி, ந. விவேகானந்தன், மு. சென்னியப்பன், ம.வீ. அருள்மொழி, ஜெ. துரைசாமி, இளையராஜா ஆகிய வழக்குரைஞர்கள் முன்னிலையாக கழகத் தோழர்களுக்கு இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்துமத அமைப்பினரை கைது செய்யாமல் தடுக்க முயன்ற கழகத் தோழர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது தவறானது என்றும் ஜாமீன் பெறும் கழகத் தோழர்கள் கட்டுப்பாடான தொண்டர்கள் என்றும் அவர்களுக்கு பிணை வழங் கினால் வழக்கினை சட்டப்படி சந்திப்பார்கள் என்று வாதிட்டார்கள்.
அரசு தரப்பில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கழகத் தோழர்களுக்கு பிணை வழங்குவதாகவும் அவர்கள் இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
கழகத் தோழர்களுக்கு பிணை வழங்க சென்னை மாவட்ட கழகத் தோழர்களிடையே நான், நீ என்று பெரும் போட்டியே நீதிமன்றத்தில் நடந்தது. இறுதியாக பினை உத்தரவாதம் வழங்கப்பட்டது, ஜாமீன் உத்தரவு வேலூர் மத்திய சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று இரவு கழகத் தோழர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் தெ. வீரமர்த்தினி வழக்குரைஞர் ம.வீ. அருள்மொழி பிணை ஆணையை எடுத்துச் சென்று, வேலூர் மத்திய சிறைச்சாலை அதிகாரியைச் சந்தித்து தோழர்கள் விடுவிக்கப்பட தேவையான பணி களைச் செய்தனர்.
சிறை வாசலில் வரவேற்பு
வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் க.சிகாமணி, பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன், மாநகர தலைவர் நெ.கி.சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தங்கராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையா, சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், இராஜேந்திரன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், சென்னையை சேர்ந்த சிவசாமி, கலாநிதி, ராகுல், ஆறுமுகம், கே.எம்.சிகாமணி மற்றும் கழக தோழர்கள் ஜாமினில் வந்த கழக தோழர்களை உற்சாகமாக வர வேற்றனர்.
இரவு ஒரு மணியளவில் சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்த விடுதலை பெற்ற தோழர்களை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் தஞ்சை செயக்குமார், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள் கனம் இறைவி ஆகியோர் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.
வேலூர் சிறையிலிருந்து விடுதலையான கழகத் தோழர்கள்
க.கலைமணி, கி.சவுந்தரராசன், ச.வினோத், ப.இராஜேஷ், செ.இரவி, ச.மகேந்திரன், கோ.திராவிடமணி, சு.வனவேந்தன், ஆ.அய்யப்பன், கு.செல்வேந்திரன், மங்களபுரம் பாஸ்கரன், கோ.இரா.வீரத்தமிழன், பொன்.பாலா, ப.வேல்முருகன், த.சீ.இளந்திரையன்.
-விடுதலை 18.4.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக