ஞாயிறு, 30 நவம்பர், 2025

கழகத் தோழர் க.வெற்றிவீரன் 29.11.2025 காலை 7 மணியளவில் மறைவுற்றார்

 

மறைவு

அசோக்லேலன்ட் திராவிடர்தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும், சோழிங்கநல்லூர் திராவிடர் கழகத்தின் மூத்த தோழருமான ஜி.வெற்றிவீரன் இன்று (29.11.2025) காலை 7 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இணையர் இந்திரா, மகன்கள் தென்னரசு, இளமாறன் மற்றும் குடும்ப உறவுகளுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஜி.வெற்றிவீரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

முகவரி: இந்திரா இல்லம், 8-340, கம்பர் குறுக்குத் தெரு, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை (காயிதே மில்லத் கல்லூரி எதிரில்).

விடுதலை நாளேடு, 29.11.2025


– – – – –

தென் சென்னை மாவட்ட நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக செயலாளராகவும் இருந்தார்.


பிற்பகல் 4.10 மணி அளவில் இறுதி ஊர்வல வண்டி புறப்பட்டு நுங்கம்பாக்கம் கிராம  தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பிறகு நுங்கம்பாக்கம் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியின் போது தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் மறைந்த நுங்கம்பாக்கம் பகுதி தோழர் ம.நடராஜன் அவர்களின் துணைவியார் ந.பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக