மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்த தென் சென்னை மாவட்ட சுவர் விளம்பரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------



நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் மனைவியும் நடிகை ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் ஆர். சரத்குமாரின் மாமியாருமான திருமதி கீதா இராதா (வயது 80) நேற்று (21.9.2025) மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று 22.9.2025 காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதையைச் செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் ராதாரவி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- விடுதலை நாளேடு, 22.09.2025

சென்னை – எம்.ஜி.ஆர். நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார்
147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்தோர்


* திராவிடர் கழக மேனாள் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ரூ.30 ஆயிரம், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், ரூ.25 ஆயிரம் என இயக்க நன்கொடைக்கென்று தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர். மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ச. முத்து மாரியப்பன் விடுதலை சந்தா வழங்கினார். (17.9.2025)
சென்னை, செப்.19 தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 17.9.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை கலைஞர் கருணாநிதி நகர் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். நகர் அங்காடி (மார்க்கெட்) பகுதியில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்புரையாற்றினார். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க. இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தளபதிபாண்டியன், செயலாளர் சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாலை 6 மணி அளவில் ‘இனநலம்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட பொறுப்பாளர் அண்ணா மகிழ்நன், கழக பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். சே.மெ.மதிவதனி. திமுக மாவட்ட பிரதிநிதி ச.முத்து மாரியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செ.கரிகால்வளவன், ஆகியோர் உரையாற்றினர்.
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன் “விடுதலை-தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள்” மலரை வெளியிட்டு உரையாற்றினார். பெரியார் பெருந் தொண்டர் சி. செங்குட்டுவன் முதல் படியை பெற்றுக் கொண்டார்.
மேடையின் கீழே இறங்கி வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெரியார் பிறந்த மலருக்கு உரிய நன்கொடையினைத் தந்து தோழர்கள் பலரும் மலரினைப் பெற்றுக் கொண்டனர்.
நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் எம்ஜிஆர் நகர் கழகத் தோழர்கள் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விழாவில் உரையாற்றியவர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், சு.குமாரதேவன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு. திவாகரன், ச.இன்பக்கனி, சி. வெற்றிச்செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வி.கே.ஆர். பெரியார் செல்வி, தி.என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி செயலாளர் சோ. சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், தென் சென்னை மாவட்ட காப்பாளர் மு.ந. மதியழகன், சா. தாமோதரன், தாம்பரம் சு. மோகன்ராஜ், கூடுவாஞ்சேரி ராசு, விடுதலை நகர் ஜெயராமன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சி.செங்குட்டுவன், தென் சென்னை இளைஞர் அணி தலைவர் ந. மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இரா. மாரிமுத்து, அ. அன்பரசன், பெரியார் களம் இறைவி, தேவ. நர்மதா, கொடுங்கையூர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, ச.மாரியப்பன், கலைமணி, க.தமிழ்ச்செல்வன், த.ராஜா, க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி,செ.பெ.தொண்டறம், திருப்பத்தூர் பெரியார் வாசகர் வட்டம் எம்.என். அன்பழகன், விஜயா அன்பழகன், மணிமேகலை சுப்பையா, ஆட்டோ சேகர், புரசை கோபி, கோ. அன்புமணி, உடுமலை வடிவேலு, நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், செ.அன்புச்செல்வி, த.மரகதமணி, சே.மெ. கவி நிசா, அரங்க.சுரேந்திரன், மு. திருமலை, நா. பார்த்திபன், த.பர்தீன், அப்துல்லா, க. சுப்பிரமணியன், ச. சனார்த்தனன், டெய்லர் கண்ணன், பெரியார் மணிமொழியன், வெ.கா.மகிழினி, கா.முருகையன், ஆ. செகதீசன், திராவிடச் செல்வன், முனைவர் முகம் இளமாறன், க. கார்த்திகேயன், கோ.க. மகராசன், சோ. நடராசன். இரா. ஏழுமலை, ப. தியாகராஜன், அய்ஸ் அவுஸ் உதயா, முல்லைவேந்தன். மு.கனகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 19.09.2025

அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவியும், மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

சென்னை, செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15-9-2025) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ,அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கிராமப்புற பிரச்சார மாநில செயலாளர் அதிரடி அன்பழகன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் வேல். சோ.நெடுமாறன், ஆஸ்திரேலியா அண்ணா. மகிழ்நன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.கே.பெரியார்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, மாநில கழக மாணவர் கழகத் துணைச் செயலாளர் ெச.பெ.தொண்டறம், மாநில கழக விளையாட்டு அணி அமைப்பாளர் பூவரசன்,
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.இராகவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், எம்.டீ.சி. .இராசேந்திரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். நகர் க.சுப்பிரமணி, வழக்குரைஞர் த.இராஜா, டெய்லர் கண்ணன், வாசகர் வட்டப்பொருளாளர் – போரூர் ஜெனார்த்தனன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், இளைஞரணி துணைச் செயலாளர் த.பரிதின், வில்லிவாக்கம் சி.காமராஜ், கொடுங்கையூர் கோ.தங்கமணி, அயன்புரம் சு.துரைராசு, அ.புகழேந்தி, புதுமை இலக்கியத்தென்றல் பொருளாளர் மு.இரா.மாணிக்கம், க.கலைமணி, உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், தொழிலாளரணி மா.குணசேகரன், மு.மதியழகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மற்றும் மயிலாடுதுறை கி.தளபதிராஜ், சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் செல்வரத்தினம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 15.09.25

ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து
சென்னை, செப்.8 ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண் டித்து சென்னையில் திராவிட மாணவர் கழக (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய பாஜக அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து இன்று (8-9-2025) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு திணித்த தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக நாளும் கல்வித்துறையின் மீது தாக்குதல்கள் நடைெபற்ற வண்ணம் இருக்கின்றன.

அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (‘UGC – University Grants Commission’) வெளியிடப்பட்ட LOCF எனப்படும் ‘கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் கட்டமைப்பு’ வரைவு பாரம்பரிய பாரத அறிவை முன்னிறுத்துதல் என்ற பெயரில் பிற்போக் குத்தனமான காவிக் கொள்கையின் கூறுகளை வெளிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ‘‘இந்தப் பாடத்திட்டத்தில் சூரிய சித் தாந்தம் போன்றவற்றைக் கொண்டு வந்து, யுகங்கள், கல்பங்கள் முதல் பிரம்மாவின் நாள் (பிரம்ம வர்சா) வரையிலான அண்ட காலச் சுழற்சிகளையும், விஷ்ணு வர்சா, சிவ வர்சா போன்ற தெய்வீக சுழற்சிகளையும் விளக்கும் பாடங்கள் இடம் பெறுமாம். இடம்பெற வேண்டுமாம்.
‘ஜோதிடம் அறிவியல் அல்ல’ என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டனரே! இன்றும் அறிவியல்படி நிரூபிக்க முடியாத முட்டாள்தனத்தின் முடைநாற்றம் வீசும் மோசடியை மாணவர்களுக்குத் திணிக்கப்போகிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்றவரான அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஜோதிடம் என்பது போலித்துறை என்று வெளிப் படையாக அறிவித்தாரே! அதைத்தான் இந்த 21ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறார்களா?
அண்மையில் இந்தியாவின் சுதந்திர நாள் விழாவின் போதும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தியார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மேல் சாவர்க்கரின் படத்தைப் போட்டு தங்களது ஹிந்துத்துவ புத்தியை காட்டிக் கொண்டனர் ஒன்றியத்தை ஆளும் பாஜகவினர்.
எனவே இந்த ஒன்றிய பாஜக அரசின் எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் 8.9.2025 அன்று நடை பெறும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 4.9.2025 அன்று அறிவித்தார். அதன்படி இன்று (8.9.2025) மேற்கண்ட முக்கிய நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிடர் மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் உள்பட அனைத்து அணிகளின் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் காவிக் கொள்கை திணிப்பைக் கண்டித்து ஒலி முழக்கமிட்டனர்.
கழக துணைத் தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார்
இந்த ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராஜேந்திரன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் ஜெ.பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, செயலாளர் உ.விஜய் உத்தமன்ராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர்கள் இறைவி, பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்ட நிறைவில் வடசென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி நன்றியுரையாற்றினார்.
விடுதலை நாளேடு; 8.9.25
தென்சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, மு.சண்முகப்பிரியன், கரு.அண்ணாமலை, சா.தாமோதரன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, அ.அன்பரசன், மு.இரா.மாணிக்கம், ந.மணித்துரை.
வடசென்னை: தே.சே.கோபால், புரசை சு.அன்புச்செல்வன், புகழேந்தி, வழக்குரைஞர் மு.வேலவன், சு.துரை ராஜ், கோபால கிருஷ்ணன், ச.ராஜேந்திரன், தி.செ.கணேசன், கோ.தங்கமணி, சி.காமராஜ், இராமு, அருள், மகேஷ் மற்றும் கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை),
தாம்பரம் மாவட்டம்: ப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், குணசேகரன், மறைமலைநகர் சிவக்குமார், கூடுவாஞ்சேரி இராசு,
கும்முடிப்பூண்டி மாவட்டம்: புழல் த.ஆனந்தன், சோழவரம் ப.சக்கரவர்த்தி, பொன்னேரி அருள், வடகரை உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி, ந.கஜேந்திரன்,
ஆவடி மாவட்டம்: வெ.கார்வேந்தன், க.இளவரசன், இரணியன், திராவிடமணி அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, ஆவடி ஜெயராமன், சுந்தராஜ், வஜிரவேல், புஷ்பா, திருநின்றவூர் ரகுபதி, அம்பத்தூர் கு.சங்கர், கொரட்டூர் இரா.கோபால், ஆவடி தமிழ்மணி, அம்பத்தூர் முத்துகிருஷ்ணன், சரவணன், ராமலிங்கம், தேவேந்திரபாபு, உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன்,
மகளிரணி: இறைவி, பெரியார் செல்வி, மு.பசும்பொன், புஷ்பா, அமலாசுந்தரி, நர்மதா, மணிமொழி, இராணி, வெண்ணிலா, முகப்பேர் செல்வி, ராணி ரகுபதி, பூவை செல்வி, மு.செல்வி, த.மரகதமணி, வி.வளர்மதி, பி.அஜந்தா, இளவரசி, தங்க.தனலட்சுமி, செ.பெ.தொண்டறம்.
விடுதலை நாளேடு; 9.9.25