நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தந்தை பெரியார் பிறந்தநாள் சுவரெழுத்துப் பிரச்சாரம்!
• Viduthalaiகழகக் கொடிகள் ஏற்றம்! பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்ப்பு!
சென்னை மண்டலக் கலந்துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சென்னை, ஜூலை 23 தந்தை பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் திட்டமிடுவதற்காக சென்னை மண் டலக் கழகத்தின் சார்பில் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை வழங்கினார்.
தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக சென்னை மண் டலத்தின் சார்பில் 18.7.2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு ஒரு கலந்துரையாடல் காணொலிக் கூட் டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங் கியது. ஆவடி மாவட்டத்தின் அமைப் பாளர் உடுமலை வடிவேல் கடவுள் மறுப்பும், இணைப்புரையும் வழங்கி னார்.
அதைத் தொடர்ந்து சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். பின்னர் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் நோக் கவுரையாக அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவும், கழகத்தின் ஆக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் பேசி தொடக்கவுரையை நிறைவு செய்தார்.
கழகத்தின் துணைப் பொதுச்செய லாளர் ச. இன்பக்கனி, மாநில மகளி ரணிப் பாசறையின் அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, செய லாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மண்டல, மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து, தந்தை பெரியாரின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண் டாடும் வழிமுறைகள் பற்றிய தங்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண் டனர்.
இறுதியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், இந்தியா முழுமையும் தற்போது தந்தை பெரி யாரின் தேவையை உணர்ந்திருக்கும் இந்த சூழலில், வருகிற தந்தை பெரி யாரின் 143 ஆம் பிறந்தநாளை கடந்த ஆண்டைவிடவும் மிகச்சிறப்பாகக் கொண்டாட.வேண்டும் என்று குறிப் பிட்டார்.
நிகழ்வில் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை, தொழிலாள ரணி, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.இறுதியாக மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
முன்னதாக சென்னை மண்டலத்தி லுள்ள ஏழு மாவட்டங்களில் நூற்றுக் கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுவதென்றும், ஒவ்வொரு மாவட் டத்தின் சார்பிலும் 100 பெரியார் பிஞ்சு சந்தாக்களை பெற்று தருவதென்றும், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தந்தை பெரியாரின் சிலைகளை மூடியுள்ள கூண்டுகளை அகற்ற தமிழ்நாடு அர சுக்கு வேண்டுகோள் விடுப்பதென்றும் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக