வெள்ளி, 5 டிசம்பர், 2025

ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்த தமிழ்நாடெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது


திராவிடர் கழகம்

* தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். * தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கினார். உடன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன். (சென்னை, 4.12.2025)

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

சென்னை, டிச.5 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின்மீது அவதூறு பரப்பும் வகையில் தீவிரவாதம் தலை தூக்கி நிற்பதாக அபாண்டமாக அவதூறுப் பிரச்சாரம் செய்வதைக் கண்டித்து நேற்று (4.12.2025) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘‘தமிழ்நாட்டில் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. இங்கேயும் தேச விரோத சிந்தனைகளும், தீவிரவாதப் போக்கும் நிலவுகின்றன. இதைச் செய்பவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் சந்திக்காமல் திரிகிறார்கள்.

ஆனால், என்.அய்.ஏ. அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதைவிட எனக்குத் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் கலாச்சாரம்தான் கவலையைத் தருகிறது.

தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. இது நல்லதுஅல்ல’’ என்று ஒரு தனியார் காவித் தொலைக்காட்சிக்குக் கடந்த10 நாள்களுக்கு முன்பு பேட்டி அளித்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளும், பேச்சுகளும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், விரோதமாக இருப்பது அவர் வந்தது முதலே நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களது கடுமையான கண்டனத்தை ஆளுநர் ஆர்.என். ரவிக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தனக்கு என்ன கட்டளையிட்டதோ, எத்தகைய குழப்பங்களை விளைவிக்க வேண்டும் என்று ஆணையிட்டதோ அவற்றை நோக்கிச் செயலாற்றுவதே தன்னுடைய முதல் கடமை என்று பா.ஜ.க. ஆளுநர் செயல்படுகிறார்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் இழித்துரைப்பதையும், பொய்யுரைப்பதையும், தமிழர்களின் சுயமரியாதையைக் குறி வைப்பதையும் ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தந்தை பெரியாரின் தன்மான திராவிட மண்!

எனவே தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், தீவிரவாதப் போக்குடையவர்கள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் அவதூறு பேசும் ஆளுநரைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நேற்று (4.12.2025) மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று 4.12.2025  மாலை5 மணியளவில் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள் கீழ்கண்டவாறு எழுப்பப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மாநில உரிமைகளைக் காப்போம்! கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் ஆளுநர் ரவியை கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவியைக்  கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

சிதைக்காதே சிதைக்காதே  நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்காதே! ஒரிசாவிலும் பீகாரிலும் தமிழர்களை இழிவுபடுத்தி ஒற்றுமையைக் குலைப்பவர் பிரதமரா? தமிழ்நாட்டின் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவி ஆளுநரா? ஆபத்து! ஆபத்து! ஆர்.எஸ்.எஸ்.சால் ஆபத்து! இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவாரால் பா.ஜ.க.வால் ஆபத்து!

மதக் கலவரங்களை நாட்டில் தூண்டி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க! ஷாகாக்கள் என்னும் பெயரால் வன்முறைப் பயிற்சிகள் தருவது யார்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.! திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி தனித் தமிழைக் கொச்சைப்படுத்தி தமிழ்நாட்டின் சம்பளம் வாங்க வெட்கமில்லையா? வெட்கமில்லையா? ஆர்.என்.ரவியே வெட்கமில்லையா? பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்! பண்பாட்டுப் படையெடுப்பைப் பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்! என்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார குழு செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் தொடக்கவுரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேத்துப்பட்டு இளங்கோ, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹாஜாகனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கண்டன உரைக்கு பின் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத் தலைமை கண்டன உரையை நிகழ்த்தினார். திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில தலைவர் வழக்குரைஞர்
த. வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்டத் தலைவர் முத்தழகன்.

மேலும் பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், பேராசிரியர் ச. இராஜசேகரன், திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு. குமாரதேவன்,  கொடுங்கையூர் தே.செ. கோபால் மற்றும் வெற்றிச்செல்வி, சி. காமராஜ், க. பெரியார் செல்வி.

வடசென்னை: மாவட்டதலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை அன்புச்செல்வன், ராஜேந்திரன், செல்லப்பன், மரகதமணி, தங்கமணி, தனலெட்சுமி,  நா. பார்த்திபன், இந்திரா, மாலதி, லட்சுமி, வாணி, பூங்குழலி, நாகமணி, பிரசீனா, அஸ்வின், வழக்குரைஞர் அருண், கலைமணி, ஆனந்தன், மகேஷ், அசோக்குமார், டெய்சன், ஜனார்த்தனன்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மடிப்பாக்கம் ஜெயராமன், ஆர்.டி. வீரபத்திரன், தமிழ் இனியன்,  மணிகண்டன்.

தென் சென்னை: மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், மு.ந.மதியழகன், ச.மகேந்திரன், பெரியார் யுவராஜ், இரா.ரவி, ச. மாரியப்பன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், மு.பவானி, வி. வளர்மதி, வி.யாழ்ஒளி, சா.தாமோதரன், பி. அஜந்தா, மா.சண்முகலட்சுமி, த. ராஜா, மு. சண்முகப்பிரியன், நல். இராமச்சந்திரன், கரு. அண்ணாமலை, நுங்கம்பாக்கம் சஞ்சய்.

கும்மிடிப்பூண்டி மாவட்டம்: மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், இரா.சோமு, மு. உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி.

ஆவடி மாவட்டம்:  மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன், க. தமிழ்ச்செல்வன், ஜெயராமன், சுந்தர்ராஜன், அய். சரவணன், பாசறை கோபால், இரணியன்,இராவணன், நாகராசன், வேல்முருகன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தங்கரவி, பூ. இராமலிங்கம், சி.எல். துரை, அ.வெ. நடராசன், ரகுபதி, வெங்கடேசன், மணிமாறன், அன்புச்செல்வி, பசும்பொன், பூவை. செல்வி, உடுமலை வடிவேல்,. செ.பெ. தொண்டறம், சி. வச்சிரவேல், பெரியார் மாணாக்கன், சந்திரபாபு, பகுத்தறிவு,  மோகனப்ரியா.

தாம்பரம் மாவட்டம்: மாவட்டத் தலைவர் பா. முத்தையன், நாத்திகன், சு. மோகன்ராஜ், ம. குணசேகரன், கருப்பையா, எஸ்.ஆர். வெங்கடேசன், உத்ரமணி, உத்ரகுமார், ராமச்சந்திரன், தனசேகர், பாலகிருஷ்ணன், கரசங்கால் கதிர்வேல் ஆகிய கழகத் தோழர்களுடன், தி.மு.க., காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்,  த.மு.மு. கழகம் என பெருந்திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

-விடுதலை நாளேடு, 05.12.2025