திங்கள், 30 நவம்பர், 2020

சேத்துப்பட்டு பெரியார் சிலை திறப்பு

27.12.93 சென்னை, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில், தந்தை பெரியார் முழு உருவச் சிலையை நான் வாழ்த்தொலியுடன் பலத்த கைதட்டலோடு பொத்தானை அழுத்தி திறந்துவைத்தேன். சிலை திறப்பு விழாவிற்கு சேத்துப்பட்டு திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ச. தனசேகரன் தலைமை வகித்து உரையாற்றினார். சி. சிகாமணி வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட கழக தலைவர் எம்.பி. பாலு, மாவட்ட செயலாளர் எம்.கே. காளத்தி, மாவட்ட அமைப்பாளர்

எம்.ஏ. கிரிதரன் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி,

- உண்மை இதழ் ஜூன் 16 - ஜூலை 15.2020


பெரியவர் மயிலை சாமிநாதன்


பெருந்தொண்டர் மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தும் ஆசிரியர்

31.10.1993 தந்தை பெரியார் பெருந்தொண்டரான மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்கள் தமது 90ஆவது வயதில், மயிலை காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினேன்.

அவரது இல்லம் சென்று, அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் எம்.கே.காளத்தி, மாவட்டப் பொருளாளர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் பல கருஞ்சட்டை தோழர்களும் உடன் வந்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த பெரியவர் சாமிநாதன் சுயமரியாதை வீரர். தான் மறைந்தால் கருப்புச் சட்டை போட்டு, எவ்வித சடங்கும் செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதை, என்னிடம் அவரது துணைவியார், பிள்ளைகள், பேரன்கள் கூறி அழுதனர். அனைவருக்கும் நான் ஆறுதல் கூறினேன். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.

அவரது கடையில் ‘விடுதலை’ இதழ் விற்பனை செய்வதில் தீவிர ஆர்வம் காட்டுபவர் சுயமரியாதை திருமணங்களை தனது இல்லத்தில் நடத்தி வைத்தவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்மிடம் மிகுந்த பாசம் கொண்டவர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையில் ஒரு பகுதி 

- உண்மை இதழ், ஜுன் 16 - ஜூலை 15 . 2020




செவ்வாய், 24 நவம்பர், 2020

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி - நுங்கை மா.நடராஜன் 5ம் ஆண்டு நினைவு நாள்

 


* அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக முன்னாள் துணத் தலைவருமான எம்.நடராஜன் அவர் களின் 5ஆம் நினைவு நாளையொட்டி (26.11.2020) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன்.(23.11.20)
அன்நாளை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகமும் அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகமும் நினைவு கூர்கிறது.

நன்கொடை
November 24, 2020 • Viduthalai • மற்றவை

அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும், நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவருமான எம்.நடராஜன் அவர் களின்  5ஆம் நினைவு நாளையொட்டி (26.11.2020) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார். உடன்: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன். (23.11.20)




ஞாயிறு, 22 நவம்பர், 2020

விடுதலை நாளேட்டுக்கு சந்தா வழங்கும் நிகழ்ச்சி - நுங்கம்பாக்கம்

 தென் சென்னை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் செ.ர பார்த்தசாரதி அவர்கள் இல்லத்தில் விடுதலை நாளேட்டுக்கு சந்த வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. (1.11.20, மாலை 4மணி, நுங்கம்பாக்கம்)\

தென் சென்னை மற்றும் வட சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற விடுதலை நாளேட்டிற்கு சந்தா தொகை வழங்கும் நிகழ்ச்சி படம்.

-விடுதலை நாளேடு, 3.11.20