பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி 27 விழுக்காடு இருந்தும்
வெறும் 12 சதவீதம் ஏன்? வீதிக்கு வந்து போராடுவோம்!
அகில இந்திய மாநாட்டை திராவிடர் கழகம் நடத்திட உள்ளது
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
வெறும் 12 சதவீதம் ஏன்? வீதிக்கு வந்து போராடுவோம்!
அகில இந்திய மாநாட்டை திராவிடர் கழகம் நடத்திட உள்ளது
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
சென்னை, ஜன.2 பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு 27 விழுக்காடு இருந்தும், வெறும் 12 சதவீதமே அளிக்கப்படுவதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடுவோம். இத்தகு போராட்டங்கள் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும். தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி உரிமைகளுக்காக அகில இந்திய மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
2.1.2016 அன்று மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 12 சதவிகித
இட ஒதுக்கீடுதானா? என்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து செய்தியாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
அரசியல் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி...
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் சுமார் 52 விழுக்காடு இருக்கின்றனர் என்று 35 ஆண்டுகளுக்குமுன் 1980 ஆம் ஆண்டு முடிவு செய்த மண்டல் கமிஷன் பரிந்துரை செய்து 27 சதவிகிதமாவது கொடுத்தால் பரவாயில்லை; எங்களுடைய பரிந்துரை 52 சதவிகிதம்தான் என்றாலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறவே மத்திய அரசிலே, பொதுத் துறை நிறுவனங்களிலே இட ஒதுக்கீடு இல்லை என்கிற நிலையை மாற்றிட, இந்திய அரசியல் சட்டத்தினுடைய 340 விதியின்படி, ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ சிறீணீss சிஷீனீனீவீssவீஷீஸீ என்பதை இரண்டாவது முறையாக அமைத்ததுதான் மண்டல் கமிஷன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வியாக்கியானம் செய்த உச்சநீதிமன்றம் 50-க்குமேல் போகக்கூடாது என்று ஒரு தீர்ப்பில் சொன்ன காரணத்தினால், மண்டல் ஆணைப்படி 52 சதவிகிதத்தை வற்புறுத்தாமல், 27 சதவிகிதமாவது கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வியாக்கியானம் செய்த உச்சநீதிமன்றம் 50-க்குமேல் போகக்கூடாது என்று ஒரு தீர்ப்பில் சொன்ன காரணத்தினால், மண்டல் ஆணைப்படி 52 சதவிகிதத்தை வற்புறுத்தாமல், 27 சதவிகிதமாவது கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது.
25 ஆண்டுகளுக்குமுன் நடைமுறைக்கு வந்தது
நம்முடைய 16 போராட்டங்கள், கிளர்ச்சிகள், 42 மாநாடுகள் இவைகளையெல்லாம் நடத்திய பிறகு, அகில இந்திய அளவில் ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிய பிறகு, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பதவியேற்றவுடன், கல்வி வாய்ப்பைப்பற்றி அடுத்தகட்டமாக எடுக்கலாம்; வேலை வாய்ப்பில் முதலில் செய்யலாம் என்று 27 சதவிகிதத்தை ஒதுக்கினார்கள்.
1993ஆம் ஆண்டில் தான் அமலுக்குவந்தது. இன்றைக்கு 25 ஆண்டுகள் பறந்தோடியிருக்கின்றன.
இதற்கிடையில், மத்திய அரசினுடைய 27 விழுக்காடு கட்டாயமாக, ஒவ்வொரு மத்திய அரசுத் துறையிலும், பொதுத் துறையிலும், பொது நிறுவனங்களிலும் அமுலாக்கப்படவேண்டும் என்ற இந்த ஆணை செல்லும் என்று 9 நீதிபதிகள் கொண்ட இந்திரா சகானி வழக்கில், மண்டல் கமிசன் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு கொடுத்தது உச்சநீதிமன்றம்.
மூன்றில் ஒரு பங்கை உயர்ஜாதிக்காரர்களே வயப்படுத்திக் கொண்டனர்!
ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரர்களுக்கு இருக்கின்ற இட ஒதுக்கீட்டையும் சரியாக அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன்முதலாகக் கணக்குத் திறக்கப்பட்டது என்ற அளவில் 25 ஆண்டுகளில் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி என்னவென்று சொன்னால், சில இடங்களில் முக்கியமான பதவிகளில் வெறும் 9 விழுக்காடுதான் நிரப்பப்பட்டுள்ளது.
அதாவது மூன்றில் ஒரு பங்குதான் அவர்கள் நிரப்பியிருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்கை முன்னேறிய ஜாதிக்காரர்களே தம் வயப்படுத்திக் கொண்டார்கள். சட்டம் வந்த பிறகும், ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும், 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 1993இல் செயலுக்கு வந்தது. நாம் போராடிப் பெற்ற உரிமை - சட்டப்படி அவர்களால் நிறைவேற்றப்படவேண்டிய ஒரு கடமை - இவை அத்தனையும் இருந்தும் அவர்கள் வேண்டுமென்றே செயல்படுத்தவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே பின்பற்றப்படவில்லை!
குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே பின்பற்றப்படவில்லை!
அண்மையில் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. வெறும் 9 சதவிகிதம்தான் முக்கிய பதவிகளில். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கக்கூடிய பிரசிடெண்ட் செகரெட்டேரியேட் என்று சொல்லக்கூடியதில் ஒரே ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் கிடையாது. பூஜ்ஜியம்தான்; இதுதான் இன்றைய நிலை என்றால், ரத்தம் கொதிக்கிறது நமக்கு.
இன்னொன்றை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும் நண்பர்களே, அதாவது மொத்தம் சராசரி கணக்கெடுத்தால், 27 சதவிகிதத்தில், வெறும் 12 சதவிகிதம்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 12 சதவிகிதத்திற்குமேல் இல்லை. அதேபோல, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்களில், 436 இடங்கள் என்றால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே! 26 சதவிகிதத்தைத் திருடியிருக்கிறார்கள்; ஆக்கிரமித்து இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவிகிதம் கொடுக்கவேண்டும்; வெறும் 3.2 சதவிகிதம்தான் கொடுத்திருக்கிறார்கள்.
மலைவாழ் மக்களுக்கு ஏழரை சதவிகிதம் கொடுக்க வேண்டும்; 1.6 சதவிகிதம்தான் கொடுத்திருக்கிறார்கள்.
94 சதவிகிதத்தை இன்றைக்கும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள்!
பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதிக்காரர்கள் 436 இடங்களில் 94 சதவிகிதத்தை இன்றைக்கும் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து நம்முடைய அரசாங்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது வேண்டுமென்றே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
நம்முடைய மக்கள் பெருவாரியாக இருந்தாலும், அவரவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், தங்களுடைய பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவேண்டுமே என்கிற அக்கறைகூட இல்லாமல், தங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் கல்வியில் இருக்கிறது என்ற ஒரு பொறுப்புணர்ச்சிகூட இல்லாமல், எங்களைப் போன்றவர்கள் தெருக்களில் வந்து போராட்டம் நடத்தி முழக்கம் போடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த முழக்கம்தான் இதுவரையில் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவேதான், இன்றைய போராட்டம் என்பது சாதாரண போராட்டம் அல்ல; இது இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கு, ஒரு முன்னோட்டமான போராட்டமாகும்.
எனவேதான், இன்றைய போராட்டம் என்பது சாதாரண போராட்டம் அல்ல; இது இந்தியா முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கு, ஒரு முன்னோட்டமான போராட்டமாகும்.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களாக வருவதற்கு இட ஒதுக்கீடுதான் காரணம்!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் வந்ததற்குக் காரணம் - இந்த இட ஒதுக்கீடு. தந்தை பெரியாரும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரும் - அன்றைக்கு நேரு அவர்கள் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியதும் - வி.பி.சிங் போன்ற சமூகநீதிக் காவலர்கள் தந்ததும் இன்றைக்கு நாம் அனுபவிக்கின்ற உரிமை.
அதேபோல, மாநிலத்தில் கம்யூனல் ஜி.ஓ.வை இடையறாமல் பாதுகாத்ததனுடைய விளைவாகத்தான் 1928 ஆம் ஆண்டு தொடங்கியது - இன்றைக்கும் இடையறாமல் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. காரணம், இங்கே நாம் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.
இங்கே 69 சதவிகித இட ஒதுக்கீடு நம்மால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிலை என்ன?
இங்கே 69 சதவிகித இட ஒதுக்கீடு நம்மால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிலை என்ன?
இரட்டை வேடம் போடும் பிரதமர் மோடி!
ஒரு வெட்கக்கேட்டை சங்கடத்தோடு சுட்டிக் காட்டவேண்டியது என்னவென்றால், தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் மோடி, நான் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவன் என்று ஒரு நேரத்தில் சொல்கிறார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோடி, அவர் ஆட்சியில் இருக்கும்போது, நாம் பிச்சை கேட்கவில்லை, சலுகை கேட்கவில்லை, உரிமையைக் கேட்கிறோம்.
27 சதவிகிதம் சட்டப்படி நிரப்பவேண்டியதை செய்யாமல், வெறும் 9 சதவிகிதம்; அல்லது சராசரி கணக்கில் 12 சதவிகிதம் என்று இருக்கலாமா?
நீதிபதிகள் பதவியிடங்களை கணக்கெடுத்தால், இன்னும் கொடுமை! உச்சநீதிமன்றத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட நீதிபதிகூட கிடையாது; ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதிகூட கிடையாது. எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நாம் போராட்டம் நடத்திய பிறகு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி உள்ளே சென்றிருக்கிறாரே தவிர, வேறு யாரும் கிடையாது.
திராவிடர் கழகத்தின் சார்பில்
மாபெரும் மாநாடு!
மாபெரும் மாநாடு!
ஆகவேதான், தொடர்ந்து நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் என்பது, தமிழ்நாடு முழுக்க திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்தகட்டமாக இந்தப் போராட்டம் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் நடத்துவதற்கு திராவிடர் கழகம் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் மாநாடு - தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தவிருக்கிறது.
எனவே, எங்களுடைய வேண்டுகோள், சுருக்கமாக என்னவென்றால், இப்பொழுது பத்திரிகையாளர்களுக்காகச் சொல்கிறேன்,
27 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படி நமக்கு அளித்தும், இன்றைக்கு நடைமுறையில் கிடைத்திருப்பது வெறும் 9 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதம்தான்.
உடனடியாக எஞ்சிய சதவிகிதம் நிரப்பப்படவேண்டும். இத்தனை ஆண்டுகள் நிரப்பப்படாததையும் சேர்த்து, நிரப்பவேண்டும்.
அடுத்தபடியாக, ஒவ்வொரு துறையிலும் இந்த இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதா என்று பார்ப்பதற்குக் கண்காணிப்புக் குழுக்கள் வேண்டும் - அதனை நிர்ணயம் செய்யவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தில் 338ஆவது விதியில் சேர்க்கவேண்டும்!
மத்தியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குச் சட்டபூர்வமான தகுதியை அளிக்கவேண்டும். இன்றைக்கு அது பெயரளவில் இருக்கிறதே தவிர - ஒரு பொம்மை அமைப்பாக இருக்கிறதே தவிர - சட்டபூர்வ அமைப்பாக அது இல்லை. அப்படி இருந்தால், அவர்களே கேட்கலாம்.
ஷெட்யூல்டு காஸ்ட் கமிஷன், ஷெட்யூல்ட் டிரைப் கமிஷன் என்பதைப்போல, அரசமைப்புச் சட்டத்தில் 338 விதியில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் என்பதையும் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு இணைக்கப்படவேண்டும். அதுதான் மிக முக்கியமாகும்.
சமூகநீதி ரீதியில், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மாநில அரசுகள் இது யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்கக்கூடாது. தங்கள் மாநிலத்தில் இந்த சமூகநீதி கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
இட ஒதுக்கீடு சலுகையல்ல-
நம்முடைய பிறப்புரிமை!
நம்முடைய பிறப்புரிமை!
சமூகநீதி என்பது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமை. இது சலுகை அல்ல; இது நம்முடைய பிறப்புரிமையாகும்.
ஆகவேதான், இந்தப் போராட்டம் ஒரு விழிப்புணர்வு போராட்டம்; மக்களிடையே விழிப்புணர்வை நாடு தழுவிய அளவில் உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டமாகும். எனவே, இந்தப் போராட்டம் இப்போது தொடக்கமே தவிர, முடிவல்ல.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
சென்னை, ஜன.2- மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வெறும் 12 சதவீகித இட ஒதுக்கீடுதானா? என்று கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (2.1.2016) முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.
கண்டன உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை, வட சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருந்திரளாக திரண்டு பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன ஆர்ப்பாட்டத் தலைமை உரையைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செய லாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி, வாய்ஸ் ஆப் ஓபிசி இதழாசிரியர் பார்த்தசாரதி ஆகியார் கண்டன உரை நிகழ்த்தினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன ஆர்ப்பாட்டத் தலைமை உரையைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செய லாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி, வாய்ஸ் ஆப் ஓபிசி இதழாசிரியர் பார்த்தசாரதி ஆகியார் கண்டன உரை நிகழ்த்தினர்.
கலந்துகொண்டவர்கள்
வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு, பொரு ளாளர் கூடுவாஞ்சேரி மா.ராசு, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரட்டீஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செய லாளர் கோ.சா.பாஸ்கர், காரைக்குடி மாவட்ட செய லாளர் என்னாரெசு பிராட்லா, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், புலவர் பா.வீரமணி, விழிகள் பதிப்பகம் வேணுகோபால், பெரி யார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்திய நாரா யணன், பொருளாளர் கு.மனோகரன், நல்லாசிரியர் சி.நா.சண்முகசுந்தரம், ஜெ.ஜனார்த்தனன், சேரலாதன், எஸ்.கணேசன், துரை.முத்துக் கிருஷ்ணன், ஜெ.ஜெய குருநாதன், ஆ.வெ.நடராசன், க.பாலமுருகன், ஆர்.பி.எம்.சாமி, க.இளவரசன், எஸ்.பழனிச்சாமி, இரா. கோபால், பூவை சோமசுந்தரம், எல்.இராஜசேகரன், வழக்குரைஞர் துரைசாமி, நாகூர் சி.காமராஜ்
தென் சென்னை
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மாவட்ட அமைப்பாளர் சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், இரா.பிரபாகரன், கோ.மஞ்சநாதன், க.திருச்செல்வம், மு.திருமலை, க.வெற்றிவீரன், சைதைதென்றல், சைதை விடுதலை, தங்கவேலு, மு.நெடுங்கிள்ளி, அடையாறு ந.மணித்துரை, அ.செல்வராசன், ச.மாரியப்பன், ந.இராமச்சந்திரன், க.பாலமுரளி, கு.சோமசுந்தரம், மு.சண் முகப்பிரியன், த.மகேந்திரன்
ஆவடி மாவட்டம்
மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புசாமி, அமைப்பாளர் உடுமலை வடிவேல், நடராஜன் அம்பத்தூர், மதுரவாயல் பாலமுரளி, பட்டாளம் பிரின்ஸ், ஜெயகுருநாதன், தமிழ்செல்வன், அம்பத்தூர் நகர துணைத் தலைவர்கி.ஏழுமலை, செய லாளர் பூ.ராமலிங்கம், முத்துகிருட்டிணன், கலைமணி, கலைஅரசன், நெடுங்கிள்ளி, பெரியார் மாணாக்கன், அன்புசெழியன் (அண்ணாநகர்), ராமண்ணா, அருண், கொரட்டூர் கோபால், மதுரவாயல் தலைவர் வேல்சாமி, செயலாளர் அய்.சரவணன், ஆவடி சோமசுந்தரம், இரா.அருணாசலம், கொரட்டூர் இளவரசன், திருநின்றவூர் கலைவேந்தன், மதுரவாயல் மனோகரன், ஆவடி தமிழ் மணி, பழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திருவள்ளூர் விமல்தா-சு, திருவள்ளூர் டில்லி, தமிழ்செல்வன்
வடசென்னை
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், அமைப்பாளர் சொ. அன்பு, பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு. திருவள் ளுவன், வெ.மு.மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆ.வெங்கடேசன், மாணவரணி அமைப் பாளர் கலைச்செல்வன், மாணவரணி செயலாளர் நா.பார்த்திபன், சிவராமன், க.ஜீவா, செல்வராசு, பால முருகன், சிட்டிபாபு, பிரபாகர், லோகேஷ், கருத்தோவியன், தி.செ.கோபால், சிங்காரவேலு, இசையின்பன், செந்தில் குமார், தம்பி பிரபாகரன், பா.பாலு, அ.அருண், கோவி.அரவிந்த், கோ.ராமு, கா.சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், கோவி.கோபால், கா.சீனிவாசன், விமல்
தாம்பரம்
மாவட்டத் தலைவர் ப.முத்தையன், துணைத் தலைவர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டிவீரபத்திரன், தாம்பரம் மோகன்ராசு, தங்க. இரமேஷ்குமார், சி.பரசுராமன, வீரசுந்தர், க.பிரபாகரன், மு.சதீஷ், க.மதன்குமார், க.இரத்தினவேல், யேசா, மீனாம்.செல்வம், நாகரத்தினம், ராமலிங்கம், மதிவாணன், இரா.அருணாசலம்
கும்மிடிப்பூண்டி
மாவட்டத் தலைவர் செ.உதயகுமார், மாவட்ட செய லாளர் த.ஆனந்தன், துணைத் தலைவர் ந.கஜேந்திரன், பழனி பாலு, புழல் நகர தலைவர் ஏழுமலை, பொன்னேரி நகர தலைவர் வே.அருள்
கழக மகளிரணி, மகளிர் பாசறை
கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் இன்பக்கனி, மீனாட்சி, சுமதி, உமா செல்வராசு, உ.மோகனப்ரியா, மாலதி, வி.வளர்மதி, பி.அஜந்தா, பவானி, மரகதமணி, சி.ஜெயந்தி, கா.வனிதா, மூ.செல்வி, மணிமேகலை, கீதா, மாலதி, மா.சண்முகலட்சுமி, ஜெயா தென்னரசு, ரகமதி.ராணி, கீதா, பெரியார் களம் இறைவி
பெரியார் பிஞ்சுகள்
கோவன் சித்தார்த்தன், அபிநயசுருதி, சமத்துவமணி, தமிழ்செல்வன், அன்புமணி, க.வ.செம்மொழி, கி.நெ.அன்புமணி
கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
பெரியார் பிஞ்சுகள்
கோவன் சித்தார்த்தன், அபிநயசுருதி, சமத்துவமணி, தமிழ்செல்வன், அன்புமணி, க.வ.செம்மொழி, கி.நெ.அன்புமணி
கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் நன்றி கூறினார்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர்
பணியாளர்கள் நலச்சங்கம்
பணியாளர்கள் நலச்சங்கம்
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர்கள் நலச்சங்கத்தின் , அய்.அய்.டி. எம்.இளங்கோவன், சென்னை உரத் தொழிற்சாலை ஆர்.கே.பாலமுருகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.இராஜசேகரன், அய்.சி.எம்.ஆர். எம்.அசோகன், எஸ்.இராஜேந்திரன், மக்கள் கணக்கெடுப்புத்துறை டி.மீனாட்சிசுந்தரம், சென்னை பெட்ரோலியம் தொழிற்சாலை எஸ்.முருகன், ஏர் இந்தியா டி.புகழேந்தி, வரதராஜன், ராஜ்மோகன், அய்.சி.எப். தர்மராஜ், பார்த்தசாரதி, இராமமூர்த்தி, அசோக், இப்ராகிம், இராமச்சந்திரன், சாமிநாதன், இரமேஷ், அம்பி, இளங்கோவன், அன்புகுமார், யூனியன் வங்கி எஸ்.சேகரன், கே.சந்திரன், எல்.சந்திரசேகரன், வி.கருணாகரன், ஆர்.கோவிந்தன், நியூஇந்தியா பிரபா கரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
* மத்திய அரசே, மத்திய அரசே!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
27 சதவீத இடஒதுக்கீடு
சட்டப்படி இருந்தும்
12 சதம் மட்டும்
கொடுப்பது ஏன்? கொடுப்பது ஏன்?
* மத்திய அரசே, மத்திய அரசே!
ஏனிந்த ஓர வஞ்சனை?
* வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே
மத்திய அரசே, மத்திய அரசே
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே
பிற்படுத்தப்பட்டோரை
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே!
* மேயலாமா, மேயலாமா
வேலியே பயிரை மேயலாமா?
* மத்திய அரசே, மத்திய அரசே
திணிக்காதே, திணிக்காதே
கிரிமிலேயரை
திணிக்காதே, திணிக்காதே!
* மத்திய அரசே, மத்திய அரசே
இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பை
அகற்றிடுக, அகற்றிடுக!
கொண்டு வா, கொண்டுவா
சட்டத்திருத்தத்தை
கொண்டு வா, கொண்டுவா!
* மத்திய அரசே, மத்திய அரசே!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
பதவி உயர்விலும் தேவை, தேவை
இட ஒதுக்கீடு தேவை!
* மத்திய அரசே, மத்திய அரசே
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இட ஒதுக்கீடு சதவீதத்தை
உயர்த்திடுக, உயர்த்திடுக!
* சிறுபான்மை மக்களுக்கு
தேவை, தேவை
இட ஒதுக்கீடு தேவை!
* போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!
* உயரட்டும், உயரட்டும்
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள்
உயரட்டும், உயரட்டும்!
* சமூக நீதிக்களத்திலே
ஜாதியில்லை மதமில்லை
கட்சியில்லை பேதமில்லை
ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்
வென்றிடுவோம், வென்றிடுவோம்!
* மத்திய அரசே, மத்திய அரசே!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
27 சதவீத இடஒதுக்கீடு
சட்டப்படி இருந்தும்
12 சதம் மட்டும்
கொடுப்பது ஏன்? கொடுப்பது ஏன்?
* மத்திய அரசே, மத்திய அரசே!
ஏனிந்த ஓர வஞ்சனை?
* வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே
மத்திய அரசே, மத்திய அரசே
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே
பிற்படுத்தப்பட்டோரை
வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே!
* மேயலாமா, மேயலாமா
வேலியே பயிரை மேயலாமா?
* மத்திய அரசே, மத்திய அரசே
திணிக்காதே, திணிக்காதே
கிரிமிலேயரை
திணிக்காதே, திணிக்காதே!
* மத்திய அரசே, மத்திய அரசே
இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பை
அகற்றிடுக, அகற்றிடுக!
கொண்டு வா, கொண்டுவா
சட்டத்திருத்தத்தை
கொண்டு வா, கொண்டுவா!
* மத்திய அரசே, மத்திய அரசே!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
பதவி உயர்விலும் தேவை, தேவை
இட ஒதுக்கீடு தேவை!
* மத்திய அரசே, மத்திய அரசே
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இட ஒதுக்கீடு சதவீதத்தை
உயர்த்திடுக, உயர்த்திடுக!
* சிறுபான்மை மக்களுக்கு
தேவை, தேவை
இட ஒதுக்கீடு தேவை!
* போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!
* உயரட்டும், உயரட்டும்
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள்
உயரட்டும், உயரட்டும்!
* சமூக நீதிக்களத்திலே
ஜாதியில்லை மதமில்லை
கட்சியில்லை பேதமில்லை
ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்
வென்றிடுவோம், வென்றிடுவோம்!
-விடுதலை,2.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக