புதன், 2 செப்டம்பர், 2015

திராவிடர் கழக மாணவரணி இளைஞரணி சார்பாக ஆர்ப்பாட்டம் -2.9.15



அண்ணல் அம்பேத்கரின் உறுதிமொழிகளை பாடதிட்டத்திலிருந்து நீக்குவதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (2.9.15) மாலை 4.00மணிக்கு திராவிடர் கழக மாணவரணி இளைஞரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் செவ்வி அளித்தனர்.





குஜராத் பி.ஜே.பி. அரசு அம்பேத்கர் உறுதிமொழிகளை அகற்றுவதா?
சென்னையில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை, செப்.3_ அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பவுத்த மதத்துக்கு மாறிய போது 22 உறுதிமொழி களை அளித்து, அந்த உறுதிமொழிகளை ஏற்று 5 இலட்சம்பேருடன் பவுத்தத்தைத் தழுவினார்.
அண்ணல் அம்பேத்கர் 125 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில், குஜராத் மாநில பள்ளிகளில் மாண வர்களுக்கு அளிக்கப்பட்ட நூலில் இடம் பெற்ற அந்த 22 உறுதிமொழி களை நீக்கிட குஜராத் மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.
அதனைக் கண்டித்தும், மீண்டும் அரசு உத்தரவை திரும்பப் பெறக்கோரியும் வலி யுறுத்தி திராவிடர் கழக மாணவரணி, இளைஞ ரணி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்த அறிக்கையின்படி, நேற்று (2.9.2015) மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக ஆர்ப் பாட்டம் மாநில மாணவரணிச் செயலா ளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்றது.
சென்னை மண்டல மாணவரணிச் செயலா ளர் பா.மணியம்மை வர வேற்றார். சென்னை மண் டல இளைஞரணிச் செய லாளர் செ.தமிழ்சாக்ரட்டிஸ் ஆர்ப்பாட்ட தொடக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்ட நோக்கங் களை விளக்கி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண் டன உரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர்
கண்டன உரை
கண்டன உரையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங் குன்றன் குறிப்பிடும் போது, அண்ணல் அம்பேத் கர் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா ஆண் டில் குஜராத் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அம் பேத்கர்குறித்த வரலாற்று நூலில் அவர் இந்து மதத் திலிருந்து பவுத்த மதத் துக்கு மாறிய போது எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை, அம்மாநில இந்துத்துவா பாஜக அரசு நீக்கியுள்ளது.
அதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்து இன்று திரா விடர் கழக இளைஞரணி, மாணவரணியின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அண்ணல் அம்பேத் கர் 125ஆம் ஆண்டில் அவருக்கு நாணயம் வெளி யிடுகின்ற அதேநேரத்தில் அவர் அளித்த இந்துத்து வாவுக்கு எதிரான 22 உறுதிமொழிகளை நீக்கு வது என்று பாஜக அரசு இரட்டை வேடம் போடு கிறது.
சென்னை கிண்டியில் உள்ள அய்.அய்.டியில் பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்துக்கு பெரியார் அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பு இருக்கக்கூடாது என்று இந்துத்துவா அரசு தடை விதித்தது.
அதேநேரத்தில் விவேகானந்தர், துர்வாசர் போன்ற பெயர்களில் அமைப்புகள் இருக்கின் றன. சென்னை அய்.அய். டியில் பணியாற்றிவருப வர்களில்  86.57 சதவீத பேராசிரியர்களாக 464 பார்ப்பனர்கள் இருக்கி றார்கள். இதில் மிகச் சிலர் உயர் ஜாதிப்பிரி வினர் பிற்படுத்தப்பட்ட வர்கள் 11.01 சதவீதம் 59 பேரும்,  தாழ்த்தப்பட் டோர் 2.05 சதவீதம் 11 பேரும், பழங்குடிப் பிரிவி னர் ஒருசதவீதம்கூட இல்லை 0.31 சதவீதத்தில் 2 பேர் உள்ளனர்.
மொத்த முள்ள 536 பேராசிரியர், துணைப்பேராசிரியர், இணைப் பேராசிரியர் களில் 90 சதவீதம்பேர் பார்ப்பனர் உள்ளனர். ஆகவேதான், பெரியார், அம்பேத்கர் பெயரில் ஓர் அமைப்பு செயல்பட்டால் தங்களின் ஆதிக்கக் கோட்டை தகர்ந்து விடும் என்று கருதி, பெரியார்,
அம்பேத்கருக்கு இட மில்லை என்று கூறி இந் துத்துவாவாத பாஜக அரசு தடை போட்டது.  அதன் விளைவு மும்பை யில் உள்ள அய்.அய்.டி, டில்லியில் உள¢ள ஜவகர் லால் நேரு பல்கலைக்கழ கம் என நாடுமுழுவதும் பெரியார், அம்பேத்கர் வாச கர் வட்டங்கள் தோன் றின. இவர்கள் மறைக்க நினைத்தால் அது இன்னும் வேகமாக பரவி வருகிறது.
அண்ணல் அம்பேத் கர் இந்துத்துவாவுக்கு எதிரான அடையாள மாகத் திகழ்பவர். இந்து மதத்தைவிட்டு வெளி யேறி பவுத்தத்தை அவர் தழுவியபோது 22 உறுதி மொழிகளை அளித்து 5 இலட்சம்பேருடன் அந்த 22 உறுதி மொழிகளை ஏற்று பவுத்தத்தைத் தழு வினார். பள்ளி மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட அவர்குறித்த வரலாற்று நூலில் அவர் ஏற்ற உறுதி மொழிகளை நீக்குவது என்பது ஏற்க முடியாதது.
ஆகவே, அதை நீக்க உத் தரவிட்ட குஜராத் மாநில பாஜக அரசைக் கண்டிப் பதுடன், மீண்டும் அந்த 22 உறுதிமொழிகளை  மீண்டும் பள்ளி மாணவர் களுக்கான நூலில் இணைத் திட வேண்டும் என்பதை யும் வலியுறுத்துகிறோம்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், திவே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன், பொதுக் குழு உறுப்பினர் இரா. விஜயக்குமார்
தென்சென்னை மாவட்டம்
தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பா ளர் சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர் கோ.வீ.இராகவன், சா. தாமோதரன், மயிலை டி.ஆர்.சேதுராமன், தர மணி கோ.மஞ்சுநாதன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந் திரன், செயலாளர் மு.சண் முகப்பிரியன், அடையாறு மணித்துரை,
எம்.இரமேஷ், இரா.பிரபாகரன், ச.மகேந் திரன், துணைவேந்தன், கோடம்பாக்கம் ச.மாரி யப்பன், பெரியார் திடல் சுரேஷ்,  பிழைபொறுத்தான், மகேஷ்,  ஆனந்த், பழனிக் குமார், ரேவந்த், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல் லூரி மாணவர்கள் அபி மன்யு, சிறீதர், மணிகண்டன்
வடசென்னை மாவட்டம்
வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரை ஞர் சு.குமாரதேவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச் செல் வன், செயலாளர் தளபதி பாண்டியன், தி.செ. கணேசன், புதுவண்ணை சு.செல்வம், தனசேகர், கு.ஜீவா, அசோக் லேலண்ட் தொழிலாளர் கழகம் தமிழ் இனியன், திரு வொற்றியூர் ந.இராசேந் திரன், கொடுங்கையூர் பிர பாகரன், கலைச்செல்வன், மகேஷ், சந்திரமதன், பா.பார்த்திபன், செந்தில், கோபி, வடசென்னை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நா.பார்த் திபன்,
தாம்பரம் மாவட்டம்
மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், செயலாளர் அனகை ஆறுமுகம், தாம் பரம் மோகன்ராஜ், கெ. விஜயக்குமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் பாசு.ஓவியச்செல்வன்,
பொழிசை கண்ணன், கூடுவாஞ்சேரி மா.இராசு, காளிமுத்து, அ.சுரேஷ், சு.இர.ராகுல், வழக்குரை ஞர் கலாநிதி, உமர், சே. மணிகண்டன், வே.திருப் பதி, ரகுவரன், சிறீதர், காளிமுத்து, இளந்திரா விடர் செந்தில், தொழி லாளர் கழகம் நாகரத்தி னம், சுரேஷ், இசையின்பன்
ஆவடி மாவட்டம்
மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் இல.குப்புராசு, மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, அ.அருண், திருநின்றவூர் இராமதுரை, மு.இரகுபதி, இளைஞ ரணித் துணைத் தலைவர்  உ.கார்த்த¤க், இளைஞர ணித் தலைவர் தமிழ்மணி, மதுரவாயல் பாலமுரளி, பூவிருந்தவல்லி நகரச் செயலாளர் பெரியார் மாணாக்கன், சோமசுந் தரம், கார்த்திக்
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
மாவட்டத்துணைத் தலைவர் ந.கஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஆனந்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ப.சக்கரவர்த்தி, பொன் னேரி நகரத் தலைவர் வே.அருள்,  மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.இரமேஷ், செய லாளர் வ.இரவி, அமைப்பாளர் சு.நாகராஜ், புழல் நகரச் செயலாளர் க.ச.க.இரணியன், பொன் னேரி நகர இளைஞரணிச் செயலாளர் க.கார்த்திக், விஜயக்குமார், புழல் ஒன் றியச் செயலாளர் கன்னம் பாளையம் ஜனாதிபதி,  கதிர்வேடு போஸ்
மகளிரணியைச் சேர்ந்த சி.வெற்றிச்செல்வி, பெரி யார்களம் இறைவி, பெலா. மு.சந்திரா, வி.வளர்மதி, பி.அஜந்தா, கீதா, மீனாட்சி, பசும்பொன், மு.செல்வி, சுமதிகணேசன், மோகனப் ரியா, கீதா கற்பகம்,  மு. பவானி,  மகளிர் பாசறை ச.நதியா, சீர்த்தி, பெரியார் பிஞ்சுகள் திராவிடச் செல் வன், அறிவுமதி மற்றும் இளைஞரணி, மாணவர ணித் தோழர் கள் ஏராள மானவர்கள் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்
தாம்பரம் மாவட்ட மாணவரணித் தலைவர் ஆ.இரா.சிவசாமி நன்றி கூறினார்.
-விடுதலை,3.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக