சனி, 16 செப்டம்பர், 2023

அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள்


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் தலைவர் மரியாதை

25

 தந்தை பெரியாரின் தலை மாணாக்கர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2023) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலையின் பீடம் அருகில் வைக்கப்பட்டிருந்த  அறிஞர் அண்ணா படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வழக்குரைஞர் துரை.அருண், இரா.பிரபாகரன், பி.டி.சி.பாலு, ஆயிரம் விளக்கு மு.சேகர், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், மா.குணசேகரன், பி.சி.செயராமன், யாழ்.திலீபன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், நா.பார்த்திபன், சி.காமராஜ், பெரியார் யுவராஜ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், அயன்புரம் துரைராஜ், பெரியார் ராசேந்திரன், நெய்வேலி 

வெ.ஞானசேகரன், க.கலைமணி, சி.வெற்றிச்செல்வி, கா.பெரியார் செல்வி, க.வினோதா மற்றும் பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக